உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா- பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை
சென்னை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 28-ந் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த போட்டிகளைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூலை 19-ந் தேதி திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று பிரதமர் மோடி வரும் 28-ந் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி தொடங்குகின்றன. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 28-ந் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு 28-ந் தேதி மாலை 4.45 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படுகிறது.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்கிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இரவு தங்குகிறார்.
Recommended Video
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 29-ந் தேதி 42-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமான படை தனி விமானத்தில் சென்னையில் இருந்து அவர் புறப்படுகிறார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications