பிரதமர் மோடி நாளை முதல் மார்ச் 6 வரை தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் பயணம்-சென்னையில் பிரசார கூட்டம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் மார்ச் 6-ந் தேதி வரை தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பார்வையிடும் பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2024 மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 4 அன்று காலை 10.30 மணியளவில், தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள பாவினி வருகை தருகிறார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மார்ச் 5 அன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காலை 11 மணியளவில், தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் உள்ள சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மார்ச் 6 அன்று காலை 10.15 மணியளவில், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், பீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.8,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications