திமுகவிற்கு உதவிய 5 பிரம்மாஸ்திரம்.. மோடி ரோடு ஷோ "தோல்வி".. உள்ளே யாரு அது? சவுக்கார்பேட்டை டீமா?
சென்னை: பிரதமர் மோடி நடத்திய சென்னை ரோடு ஷோ பெயிலியர். வேலூர் ரோடு ஷோ பெயிலியர். பொள்ளாச்சி தொகுதியில் திமுகவிற்கு கொஞ்சம் போட்டி உள்ளது. கொஞ்சம் டப் கொடுக்கிறார்கள். மோடி இங்கே வருவதால் எதோ பெரிதாக பாஜகவிற்கு ஆதரவு இருப்பது போல காட்டுகிறார்கள்., என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரங்களை செய்து வருகின்றன. தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளன.. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
இப்போது வரை களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது. சில இடங்களில் களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது போல கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கின்றனர். கோவையில் கடுமையான போட்டி இருப்பதாக சில மீடியா கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பாஜக கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீலகிரி, தேனி , ராமநாதபுரம், தருமபுரியில் இதேபோல் கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அதெல்லாம் நிதர்சனம் இல்லை. இன்னொரு பக்கம் அதிமுக வேட்பாளர்கள் தனியாக பலமாக இல்லை. அவர்களுக்கு அமைப்பின் பலம் மட்டுமே முக்கியம். இரட்டை இலை சின்னம் முக்கியம். அதை தவிர வேறு இல்லை. பாஜகவிற்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல தோற்றத்தை காட்டுகிறார்கள். இப்போது வரை களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது. சில இடங்களில் களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது போல கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ரொம்ப சிம்பிளாக தேர்தல் செல்கிறது. திமுகவிற்கே அதிக வாய்ப்பு களத்தில் உள்ளது. திமுகவிற்கு எதிரான வாய்ப்பு மூன்றாக பிரிகிறது. கட்சி பலம் + ஆட்சி பலம் + கூட்டணி பலம் + பண பலம் + ஜாதி பலம் என்று 5 பலம் திமுகவிற்கு உள்ளது. பாஜகவிற்கு அப்படி பலம் இல்லை. பாஜகவிற்கு கட்சி பலம் இல்லை. அதனால்தான் மோடி கலந்து கொண்ட சென்னை நிகழ்விலேயே ஆட்கள் இல்லை.
மோடியை பார்க்கவே கூட்டம் இல்லாமல் இருந்தது. சென்னை ரோடு ஷோ பெயிலியர். வேலூர் ரோடு ஷோ பெயிலியர். பொள்ளாச்சி தொகுதியில் திமுகவிற்கு கொஞ்சம் போட்டி உள்ளது. கொஞ்சம் டப் கொடுக்கிறார்கள். மோடி இங்கே வருவதால் எதோ பெரிதாக பாஜகவிற்கு ஆதரவு இருப்பது போல காட்டுகிறார்கள்.
ஆனால் நட்டா ஷோ தொடங்கி மோடி ஷோ வரை எல்லாம் தோல்வி. களத்தில் அவர்களுக்கு சப்போர்ட் இல்லை. சென்னையில் வந்த பலர் நார்த் இந்தியன்ஸ். சவுகார் பேட்டை நார்த் இந்தியன்ஸ். அதற்காக திமுக மிகப்பெரிய அளவில் வெற்றிபெறாது. கடந்த முறையை விட வாக்கு சதவிகிதம் குறையும். ஏனென்றால் கண்டிப்பாக வாக்குகள் குறையும்.
ஆனால் தோல்வி அடைய மாட்டார்கள். பெண்களை மையப்படுத்தி திட்டங்களை கொண்டு வந்துவிட்டனர். அப்படி இருக்க அந்த வாக்குகள் திமுகவிற்கு செல்லும். பெண்கள் வாக்குகள் அப்படியே திமுகவிற்கு செல்லும் . இது தேர்தல் முடிவுகளில் திமுகவிற்கு பெரிய பலனை கொடுக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications