5 வருசம் நிலத்தை பயன்படுத்தா விட்டால்.. ஹைகோர்டில் வழக்கறிஞர் பாலு வைத்த பரபரப்பு வாதம்
சென்னை: என்எல்சி அருகே பரவனாறை பொறுத்தவரையில் விளைநிலங்கள் வழியாத்தான் செல்கிறது. அந்த பணியை செய்ய அனுமதிப்போம் என்று சொன்னால், நிச்சயமாக விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற செய்தியை நாங்கள் சொல்லியிருக்கிறோம் என பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இந்த வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, நிலத்தை கையகப்படுத்தி 16 ஆண்டுகளாக அதனை சுவாதீனம் எடுக்காமல், சாகுபடி செய்ய அனுமதித்த அரசு, திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அறுவடைக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில் பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.
புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, கையகப்படுத்திய நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அதை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால், நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் இழப்பீடு கொடுக்கப்பட்டு, 2012ம் ஆண்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் 32 ஹெக்டேர் நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்ட நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.
ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற்ற பின் அந்த நிலம் அரசுக்கு சொந்தமாகி விடுகிறது. அதில் தொடர்ந்து நீடிப்பது அத்துமீறல் எனத் தெரிவித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், அறுவடைக்கு பின் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மின் தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால் கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தை சுவாதீனம் எடுக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அரசியலுக்காக இந்த விவகாரத்தை பயன்படுத்துவதாகவும், அரசியல் கட்சியினர் அங்கு சென்றிருக்காவிட்டால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது எனவும் குறிப்பிட்டார்.
மின் தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால் கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தை சுவாதீனம் எடுக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அரசியலுக்காக இந்த விவகாரத்தை பயன்படுத்துவதாகவும், அரசியல் கட்சியினர் அங்கு சென்றிருக்காவிட்டால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து என்.எல்.சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை செய்த பின், 2023 ஜனவரியில் நிலம் சுவாதீனம் எடுக்கப்படும் என 2022ம் ஆண்டு டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. இந்த கால்வாய் அமைக்காவிட்டால், பருவமழை காலத்தில் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து பெருத்த சேதம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சேதமான பயிருக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும், பழைய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு புதிய சட்டம் பொருந்தாது என்பதால், பயன்படுத்தாத நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கோர முடியாது என்றார். இதையடுத்து, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்? என என்.எல்.சி. தரப்புக்கும் கேள்வி எழுப்பினார்.
வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்.எல்.சி. தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளார். கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தார்
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், " என்எல்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கெல்லாம் நாங்கள் கூட்டங்கள் நடத்தி, கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார். இந்த வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாக என்எல்சி நிறுவனம் ஒரு பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுவரை கைப்பற்றப்பட்டிருக்கக்கூடிய நிலங்கள், இந்த நிலம் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு எந்த அளவிற்கு இழப்பீடு தர இருக்கிறார்கள் என்ற விவரங்களை எல்லாம் எடுத்துரைக்க வேண்டும் நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கின் இறுதி விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தார். அதற்குள்ளாக அங்கே பாதிப்புகள் இல்லாத வகையில், உங்களுடைய பணிகள் நடைபெற வேண்டும் என்று நீதிபதி தெளிவு படுத்தியிருக்கிறார்.
அங்கு பரவனாரை பொறுத்தவரையில் விளைநிலங்கள் வழியாகத்தான் செல்கிறது. அந்த பணியை செய்ய அனுமதிப்போம் என்று சொன்னால், நிச்சயமாக விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற செய்தியை நாங்கள் சொல்லியிருக்கிறோம். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு நாளை மறுதினம் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்" இவ்வாறு வழக்கறிஞர் பாலு கூறினார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications