கூட்டணி களத்தில் பாமகவும் குதிக்கிறது.. முதல் அச்சாரம் போட்டாச்சாம்!
அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக தயாராவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: கூட்டணிக்கு பாமக முதல்கட்ட அச்சாரம் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுடன் கூட்டணி வைத்த கட்சி எது என்றால் பாமகதான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம்.
அதிமுக, திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்த அதே நேரத்தில் எதிர் முனையில் உள்ள பாஜக, தேமுதிகவையும் பாமக விடவில்லை. அவர்களுடன் கை கோர்த்தது.

விஜயகாந்த்
கடந்த முறை தேர்தலின்போது 3-வது அணியாக உருவானது பாமக. அந்த அளவுக்கு அன்புமணி உட்பட எல்லோருமே கள வேலைகளில் கடுமையாக உழைத்தார்கள். மேலும் வைகோ செய்த கூட்டணி குழப்பத்தினாலும், விஜயகாந்த் செய்த சில வெளிப்படையான அத்துமீறல்களாலும் தேமுதிக மீதான நன் மதிப்புகள் குறைந்ததால், பாமக 3-வது இடத்துக்கு உயர்ந்தது.

என்ன திட்டம்?
இப்போது வரப்போகும் தேர்தலை பொறுத்தவரை, என்ன செய்ய போகிறது? என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அதன் போக்கு சிலவற்றை யூகிக்க வைக்கிறது.

கூட்டணி அமைப்போம்
ஒரு கட்டத்தில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று மேடைக்கு மேடை முழங்கியபடியே வந்த அதே அன்புமணிதான், கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்று தெரிந்து கொண்டார். அதனால்தான், வரும் தேர்தலில் கூட்டணிவைத்துதான் தேர்தலை சந்திப்போம் என்று கறாராக சொல்லி விட்டார். அப்படியானால் யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாளாகவே எழுந்து வருகிறது?

திமுக இல்லை
பாஜகவை வழக்கம்போல் வறுத்தெடுத்து கொண்டுள்ளார் ராமதாஸ். அதனால் அங்கும் கூட்டணி இல்லை. தங்களுடன் பாமகவை சேர்த்து கொள்ள மாட்டோம் என்று திமுக சொல்லி ஆதரவு கதவையும் அடைத்து விட்டது.

வரவேற்பு அறிக்கை
திமுகவின் இந்த அறிவிப்பில் இருந்தே பாமக அதிமுகவை பெருமளவு பகைத்து கொள்ளாமல் நாசூக்காக நடந்து கொள்ள தொடங்கியது. மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் விடுத்த பல அறிக்கைகளுக்கு ராமதாஸ் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து ட்வீட்களும், அறிக்கைகளும் வெளியிட்டார்.

சீட் பஞ்சாயத்து
இந்த நிலையில்தான், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக ஆயத்தமாகவும், அதற்காக முதல்கட்ட பேச்சுவார்த்தைகூட நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பாமக 10 சீட் கேட்கிறதாம், ஆனால் அதிமுக 5 தான் தருவேன் என்கிறதாம். இப்படி இழுபறி போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பலம் கூடியுள்ளது
பாமக சீட் அதிகமாக கேட்க காரணம் தற்போது அதன் பலன் பலம் கூடியிருப்பதுதான், வாக்கு வங்கியும்உயர்ந்திருப்பதுதான். வட மாவட்டங்களை தன் கையில் இறுக்க வைத்துள்ளது பாமக மட்டும்தான். அதனால்தான் துணிந்து இத்தனை சீட் கேட்க முயன்றதாக கூறப்படுகிறது.

வலிமையான பேட்டிகள்
ஆனால் ஆவண கொலைகள் தமிழகத்தில் எங்கு நடந்தாலும் அதற்கு பாமக தனது எதிர்ப்பை பகிரங்கமாக பதிவு செய்வதே கிடையாது என்ற கருத்து மேலோட்டமாக உள்ளது. மற்ற தலைவர்கள் இதை கண்டித்து அறிக்கைகள் விட்டாலும், பாமக தரப்பில் வலிமையான கருத்தை சொல்லி நடுநிலைமையுடன் பேட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை மட்டும் பாமக உடைத்தெறிந்துவிட்டால், தென் மாவட்டங்களிலும் பாமக செல்வாக்கு உயருமே என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கூட்டணி உறுதியா?
எப்படியோ, பாமக அதிமுகவில் உறுதியாக இணைந்து விட்டதாக தெரிந்தால்தான், மற்ற கட்சிகளின் நிலை என்ன, அதிமுகவில் அடுத்தடுத்து சேரப் போகும் கட்சிகள் என்னென்ன என்பது தெரியவரும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications