கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடும் 3 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என். சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுகிறது. பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜ்ய சபா சீட்டில் அன்புமணி எம்பியாகிவிட்டார். இதையடுத்து பாமக போட்டியிடும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

அதன்படி பாமகவுக்கு சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர்(தனி), பெரம்பூர், சேலம் வடக்கு மற்றும் அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என். சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் மீண்டும் வடிவேல் ராவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட வடிவேல் ராவணன், சிபிஎம் வேட்பாளர் நாகை மாலியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதேபோல் செஞ்சி தொகுதியில் கடந்த முறையும் பாமக தான் போட்டியிட்டது. திமுக சார்பாக போட்டியிட்ட செஞ்சி மஸ்தானை எதிர்த்து பாமக சார்பாக ராஜேந்திரன் போட்டியிட்டார்.
சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் தோல்வி அடைந்தார். இதனால் இம்முறை செஞ்சி தொகுதியில் கணேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர் தொகுதியில் கடந்த முறை திமுக மற்றும் அதிமுக நேருக்கு நேர் மோதியது. இம்முறை பாமக நேரடியாக களம் காண்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications