‛‛வேண்டவே வேண்டாம்’’.. ஜுன் 1ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு எந்த அவசரமும் இல்லை. கடைசி கட்ட லோக்சபா தேர்தலுடன் ஜுன் 1ம் தேதி விக்கிரவாண்டி தேர்தலை நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவின் புகழேந்தி இருந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5ம் தேதி விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

PMK founder Ramadoss has requested the Election Commission not to hold Vikravandi by-election on June 1

இந்த கூட்டத்தில் அவர் மயங்கி விழுந்தார். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கடந்த 8 ம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடைசி கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் ஜுன் 1ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் ஜுன் 1ம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.

‛‛திமுகவுக்கு ராசியில்லாத விக்கிரவாண்டி’’.. வென்ற 2 எம்எல்ஏக்களும் பாதியிலேயே மரணம்.. சோக பின்னணி


இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து ஜூன் 1-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல.

ஜூன் 1-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான மனுத்தாக்கல் மே 7-ஆம் நாள் தொடங்கப்பட வேண்டும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் மூன்றாவது அதிக வெப்பநிலை ஒடிஷா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் பதிவாகி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கூட கடுமையான வெப்பம் தகிக்கிறது.

தமிழ்நாட்டில் மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், அப்போது 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பரப்புரை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு, தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் (Heat Stroke) ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

‛‛ஜுன் 1ல் வாய்ப்பு’’.. விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தீவிரம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8-ஆம் நாள் தான் அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும், அக்டோபர் மாதத்தில் ஹரியானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தபட வேண்டும் என்பதால் அவற்றுடன் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் கலந்து பேசி தான் தேர்தல் தேதியை தீர்மானிக்க வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+