‛‛திமுகவுக்கு ராசியில்லாத விக்கிரவாண்டி’’.. வென்ற 2 எம்எல்ஏக்களும் பாதியிலேயே மரணம்.. சோக பின்னணி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி நேற்று காலமானார். இங்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெல்லும் எம்எல்ஏக்கள் 5 ஆண்டு பதவியை நிறைவு செய்யாமல் பாதியிலேயே காலமாகி வரும் சோக சம்பவம் நடந்து வருவதால் விக்கிரவாண்டி திமுகவுக்கு ராசியில்லாத தொகுதியா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவருக்கு வயது 71. அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கம். அவரது வலதுகரமாக செயல்பட்டு வந்த புகழேந்திக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் புகழநே்தி 93,730 ஓட்டுகள் பெற்று அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வனை (பெற்ற வாக்குகள் 84,157) வீழ்த்தினார். இந்நிலையில் தான் புகழேந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆனார். நேற்று முன்தினம் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை வழங்கினர்.
37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே
இருப்பினும் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். புகழேந்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தான் விரைவில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது விக்கிரவாண்டி தொகுதிக்கான 2வது இடைத்தேர்தலாகும்.
இது ஒருபுறம் இருக்க விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுகவுக்கு ராசியில்லாத தொகுதியா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் திமுக எம்எல்ஏக்கள் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன்பே காலமாகிவிடுகின்றனர். அதாவது இந்த தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 4 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக சார்பில் வென்ற 2 எம்எல்ஏக்களும் பாதியிலேயே இறந்துள்ளன.
காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது தெரியுமா?
அதன்படி இந்த தொகுதி கடந்த 2011ல் தான் புதிதாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் ராதாமணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமமூர்த்தி வீழ்த்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாக இருந்த ராமமூர்த்தி 5 ஆண்டு பதவியை நிறைவு செய்தார். அதன்பிறகு 2016ல் நடந்த தேர்தலில் திமுகவின் ராதாமணி வெற்றி பெற்றார். ஆனால் அவர் பாதியிலேயே காலமானார். உடல்நலக்குறைவால் 2019ல் ராதாமணி காலமானார்.
இதையடுத்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் தற்போது காலமான புகழேந்தியும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் வெற்றி பெற்றார். புகழேந்தி தோற்றார். இருப்பினும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளரான புகழேந்தி சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனாலும் கூட புகழேந்தி தனது 5 ஆண்டு கால எம்எல்ஏ பதவியை அனுபவிக்காமல் நேற்று காலமானார்.
இந்த விக்கிரவாண்டி தொகுதியில் இதுவரை நடந்த 4 தேர்தல்களில் திமுக சார்பில் ராதாமணி, புகழேந்தி ஆகியோர் வென்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் 2 பேரும் 5 ஆண்டு எம்எல்ஏ பதவியில் நீடிக்காமல் பாதியிலேயே உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளன. இந்த சோகத்தால் தான் திமுகவுக்கு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி ராசியில்லாததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications