காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது தெரியுமா?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார்.

புகழேந்தி திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவார். அதோடு அரசியலுக்குள் நுழைந்ததுமே அவர் எம்எல்ஏ ஆகிவிடவில்லை. திமுகவில் படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏ பதவியை எட்டிப்பிடித்தார்.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் பிறந்த புகழேந்தி திமுகவின் கிளை செயலாளர், கோலியனூர் ஒன்றிய செயலாளர், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத் தலைவர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். மேலும் ஊராட்சி மன்ற தலைவராகவும், கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், கோலியனூர் ஒன்றியக் குழு தலைவராகவும் இருந்தார்.
கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவில் போட்டியிட்டு தோல்வியடைந்த புகழேந்தி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன புகழேந்தி விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தான் அவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் தான் புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி பார்த்தால் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். ஒருவேளை ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி தள்ளிப்போனால் அக்டோபர் மாதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இது 2வது இடைத்தேர்தலாகும். ஏனென்றால் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் ராதாமணி வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். அவர் கடந்த 2019ல் காலமானார். அப்போது முதல் முறையாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுடன் தற்போது காலமான புகழேந்தி தோற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ முத்தமிழ் செல்வனை வீழ்த்தி புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications