‛‛ஜுன் 1ல் வாய்ப்பு’’.. விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தீவிரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் தான் கடைசி கட்ட லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவார். இந்நிலையில் தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் அவர் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த 5ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் புகழேந்தி பங்கேற்ற நிலையில் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6ம் தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து கடந்த 8 ம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியானால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்தல் நடத்த நேரம் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விக்கிரவாண்டி தொகுதிக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் என்பது ஜுன் 1ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாகன அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை ஜுன் 1ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில் அதன் முடிவுகள் ஜுன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுடன் சேர்த்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications