“தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது..” ராஜேந்திர சோழனை உதாரணமாக சொன்ன ராமதாஸ்
மயிலாடுதுறை: பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே மகன் அன்புமணிக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தந்தையை விட தனயன் மிஞ்சியவனாக இருக்க கூடாது என்று பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இதில் ராமதாஸ் பேசியதாவது, "கங்கை கொண்ட சோழபுரத்தை பற்றி எனக்கு முன்னாள் பேசியவர்கள் கூறியிருந்தார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலையும், ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் கட்டியிருந்தனர். சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார்.
அப்போது அவர் 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது' என்பதற்காக உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் சொல்லியிருந்தார். அருமையான வார்த்தை.
என்னுடைய அருமை நண்பர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தார். இதனால் 108 சமூதாயங்கள் பயன்பட்டன. இப்போது முதலமைச்சராக நீங்கள் தந்தையை மிஞ்சிய தனயனாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதை செய்ய ஏன் தயங்குகிறீர்கள்? என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றதும், திங்களை போற்றதும் என்று சொல்லியிருந்தார்கள். இன்னொன்றை அவர்கள் அந்த காலத்தில் சொல்லவில்லை. பெண்களை போற்றதும் என்று சொல்லவில்லை. அதை நாம் இப்போது சொல்லுவோம்." என்று பேசியிருந்தார்.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications