Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கா ஸ்கெட்ச்.. சீறிய தோட்டா! 2 நொடியில் பாமக புள்ளியை முடித்த கும்பல்! உறைய வைத்த சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகியும் வழக்கறிஞராக பணியாற்றிய சக்கரவர்த்தி சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரை இரண்டு பேர் சுட்டு கொலை செய்துள்ளனர். கழுத்தில் குண்டு பாய்ந்து சக்கரவர்த்தி உயிரிழந்தது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. இவர் வேலூர் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டுக்கு செல்லும் வழியில் சக்கரவர்த்தி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ranipettai crime cctv

இந்த சம்பவம் பாமகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஆன அன்புமணி ராமதாஸ் சக்கரவர்த்தியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் உடற்கூறு ஆய்வில் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை யாரோ சுட்டு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் சக்கரவர்த்தி விபத்துக்குள்ளானதாக சொல்லப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் சக்கரவர்த்தியை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் அவருக்கு மிக நெருக்கமாக சென்றதும், அதற்குப் பிறகுதான் அவர் சாலையில் விழுந்ததும் தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்த நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியானது. அதாவது திட்டமிட்டு இரண்டு பேர் சக்கரவர்த்தியை இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சுட்டுக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி ரெண்டட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல குற்றவாளியான சீனிவாசன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். வழக்கறிஞரான சக்கரவர்த்தி தான் அவர்களை ஜாமீனில் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சீனிவாசனின் கூட்டாளிகளான பிரபுவும் மாதவனும் சக்கரவர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

கடந்த 11-ம் தேதி வேலையை முடித்துவிட்டு சக்கரவர்த்தி வீட்டுக்கு சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்து சென்ற பிரபு நாட்டு துப்பாக்கியால் சக்கரவர்த்தியை சுட்டு கொலை செய்திருக்கிறார். கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் கொலையாளிகள் இருவரும் தப்பி உள்ளனர். போலீசார் தேடி வந்த நிலையில் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்ற போது மாதவன் கைது செய்யப்பட்டார்.

பிரபுவை பிடிக்க முயன்ற போது போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதனால் இஸ்பெக்டர் ராமச்சந்திரன் பிரபுவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்துள்ளார். சீனிவாசனை கொலை செய்தவர்களை சக்கரவர்த்தி ஜாமினில் எடுத்ததால் அவரை கொலை செய்ததாக இருவரும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே ராணிப்பேட்டை பகுதியில் சக்கரவர்த்தியின் கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கொலை சம்பவத்தில் அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பாமகவும், அதிமுகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிதைந்துள்ளதாகவும் நாட்டு துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார், என்பது, குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+