படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக அன்புமணி ராமதாஸ்-ன் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில் தனது விடப்பட்டிருக்கிறார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். ஆரம்பத்திலிருந்து ஜிகே மணி உள்ளிட்டோரின் தவறான வழிகாட்டுதலால் தான் ராமதாஸ் இந்த நிலைமைக்கு ஆளானதாக தைலாபுரம் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை சந்திக்கச் சென்ற ஜிகே மணியை ராமதாஸின் மகளான கவிதா கணேஷ் கடுமையாக சாடியதாக தகவல்கள் உலாவுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் கிளைமாக்ஸுக்கு வந்துள்ளன. கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அதற்குப் பிறகு கட்சி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இளைஞரணி தலைவர் பதவி தொடர்பாக ஜிகே மணிக்கும் அன்புமணிக்கும் விரிசல் விழுந்த நிலையில், ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் கட்சியின் தலைவர் நான்தான் எனக் கூறிய அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார்.

பாமக மோதல்
ராமதாஸ் போட்டி, பொதுக்குழு - செயற்குழு கூட்டங்களை நடத்தினாலும் அது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தேர்தலில் நிற்கும் நிலையில் அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ராமதாஸ்
இதற்கிடையே தான் உருவாக்கிய கட்சி தன்னை விட்டு போய்விட்டதால் அதிருப்தியில் இருக்கும் ராமதாஸ் சில தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை உபயோகிக்க கூடாது என்பதால் புதிய அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சின்னங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் ராமதாஸ். இது ஒரு புறம் இருக்க ஆரம்பத்திலிருந்து ராமதாசை ஜிகே மணி உள்ளிட்டோர் தவறாக வழி நடத்துவதாக தொடர் புகார்கள் அன்புமணி தரப்பால் முன்வைக்கப்பட்டது.
ராமதாஸ் மயக்கம்
இதற்கிடையே நேற்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராமதாஸ் பல்வேறு முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.
ஜிகே மணி
இதற்கிடையே சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் முன்னாள் தலைவரான ஜிகே மணி மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜிகே மணியை பார்த்ததும் ராமதாஸின் மூன்றாவது மகளான கவிதா கணேஷ் உச்சகட்ட கோபமடைந்து கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.
கவிதா கணேஷ்
" எங்கள் குடும்பத்தை பிரித்தது நீங்கள்தான்.. இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்? எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டு உங்கள் மகனுக்கு காங்கிரஸில் சீட்டு வாங்கி விட்டீர்கள்! திமுகவுக்கு வேண்டுமானால் நீங்கள் போய் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே? நாங்கள் உங்களை தடுக்கவில்லை! ஆனால் பதவிக்காக சதி செய்து எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டீர்கள்!
பாமக அரசியல்
இதுவரைக்கும் இந்த குடும்பத்திற்கு செய்த துரோகங்கள் பத்தாதா? இதற்கு மேல் என்ன இருக்கிறது? இப்போது என்ன சதி செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க? வர்ற கோவத்துக்கு என்ன செய்வேன் என எனக்கு தெரியாது மரியாதையாக போய்விடுங்கள்" என கொந்தளித்தாராம். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜிகே மணி சிறிது நேரம் ஸ்டன்னாகி நின்று விட்டு பிறகு அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் என்கின்றனர் தைலாபுரம் வட்டாரத்தினர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications