சிங்கம் மாதிரி இருந்த மனுஷன..ராமதாஸை பொம்மையாக்கிட்டாங்க! சதியில் சேர்ந்த ஸ்ரீகாந்தி..பாமக பாலு பரபர
சென்னை: சேலத்தில் இன்று நடந்தது பொதுக்குழு அல்ல அது கேலிக்கூத்து; அந்தத் தீர்மானங்கள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது எனவும், சிங்கம் மாதிரி கர்ஜித்துக் கொண்டிருந்த டாக்டர் ராமதாசை பொம்மை போல மாற்றி விட்டார்கள் என பாமக வழக்கறிஞர் பாலு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பாமக தலைவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
பல்வேறு விமர்சனங்களுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாமக பொதுக்குழு
அப்போது பேசிய அவர்," அனைத்துக் கட்சிகளிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொது குழு அந்த பொதுக் குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, செயல் குழுவில் உயர்மட்ட தலைவர்கள் விவாதித்து செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுக் குழுவிற்கு கொண்டுவந்து பொதுக்கூட்டில் விவாதித்து அதன் பிறகு தான் ஒப்புதல் கொடுப்பார்கள். இதுதான் அனைத்து கட்சிகளுக்குமான நடைமுறை. இன்று சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவே அல்ல.
பாமக பாலு
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் தீர்மானமும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனரே பேசாமல் நடைபெற்ற கூட்டம் எப்படி பொதுக்குழு கூட்டமாக இருக்க முடியும். அனைவருக்கும் பசிக்கிறது. அதனால் 27 தீர்மானத்தையும் நிறைவேற்றி விட்டதாக அறிவித்து விட்டார்கள். இந்த கூட்டத்தின் உடைய ஒரு சிடி எங்களுக்கு போதும். ஒரு காலத்திலும் இவர்களால் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்புகளுக்கு வரவே முடியாது . இவர்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கக்கூடிய ஆதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ்
ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் தரப்பை குடிமையியல் நீதிமன்றத்தை நாடும் படி டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது ஆனால் அவர்கள் இன்னும் செல்லவில்லை. சேலத்தில் இன்று அவர்கள் நிறைவேற்றி இருக்கக்கூடிய தீர்மானங்களை குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும். பாமகவின் பொதுக்குழு என்று சொல்கிறார்கள் பிறகு அதில் எப்படி பசுமைத்தாயகம் என்ற அமைப்பின் தலைவரை மாற்ற முடியும் இன்று நடந்தது பொதுக்குழுவா அல்லது பசுமைத்தாயகம் அமைப்பின் கூட்டமா என பாலு கேள்வி எழுப்பினார்.
பசுமைத்தாயகம்
பசுமைத்தாயகம் என்பது ஐநா மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சுற்றுச்சூழல் நீர் வளம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஐநா மன்றத்தில் எதிரொலிக்க கூடிய ஒரு அமைப்பாக பசுமைத்தாயகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இன்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் தலைவரை மாற்றி விட்டதாகவும் அதன் தலைவராக வேறு ஒருவரை நியமிப்பதாகவும் எப்படி சொல்ல முடியும். பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரை மாற்ற வேண்டுமானால் பசுமைத்தாயகம் அமைப்பு கூடி தான் மாற்ற முடியும்.
ஸ்ரீகாந்தி
டாக்டர் ராமதாஸ் என்னுடைய வாரிசுகள் கட்சிக்கு வர மட்டார்கள் என்று சத்தியம் செய்த காரணத்தால் அன்புமணிக்கு உரிய பதவி வராமல் காலதாமதமானது. அவருடைய அனுபவம் மற்றும் ஆற்றலின் காரணமாகத்தான் அவருக்கு எம்.பி பதவியும் அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது. இன்று கூட்டணியை அறிவிக்க போகிறோம் என்று சொல்லி இருந்தார்களே அதன்படி ஏன் கூட்டணியை அறிவிக்கவில்லை? டாக்டர் ராமதாசை இதற்கு முன்பு ஜிகே மணி இயக்கிக் கொண்டு இருந்தார் இப்போது ஸ்ரீகாந்தியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். யாரோ எழுதிக் கொடுப்பதை டாக்டர் ராமதாஸ் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஜிகே மணி
இதற்கு முன்பு வார்த்தைக்கு வார்த்தை சென்னை ஐயா சின்னையா என்று பேசிக்கொண்டு இருந்த ஜிகே மணி இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அன்புமணி அன்புமணி என்று ஒருமையில் பேசுகிறார். டாக்டர் ராமதாஸ் அன்புமணியின் மீது எவ்வளவு விமர்சனங்கள் முன்வைத்தும் அன்புமணி அமைதியாக கடந்து செல்கிறார். அன்புமணி பொறுமையாக கடந்து செல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
சௌமியா அன்புமணி
உலகிலேயே அவரைப்போல சிறந்த மகன் எந்த தந்தைக்கும் அமைய மாட்டார். ஜிகே மணியை பாமகவிலிருந்து நீக்கிவிட்டோம் பாமகவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியை மாற்றிவிட்டதாக சேலத்தில் இன்று அறிவித்திருப்பது செல்லாது. பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தொடர்கிறார்." என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications