PMK Mango Symbol: அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் எடுத்த அஸ்திரம்.. பிப்.2 ஆம் தேதி ஐகோர்ட்டில் நடக்கும் முக்கிய விசாரணை
சென்னை: (PMK Mango Symbol) அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில் அதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வர உள்ளது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இது தீர்க்கப்படும் என நம்பியிருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

அன்புமணி நான் தான் தலைவர் என்று கூறி வந்த நிலையில் தேர்தல் ஆணையமும் அன்புமணி தரப்பிற்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் அன்புமணி ராமதாஸ் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வதாக போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் நிறுவனர் என்கிற முறையில் எனது அங்கீகாரம் இல்லாமல் கட்சிக் கூட்டங்களை அன்புமணி நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் தொடர்பான கடிதத்தினை தனக்கு தான் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் யாருக்கும் கொடுக்காமல் சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால் இப்போது வரை சின்னம் முடக்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மறுநாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் ஆகியோர் முன் விசாரணைக்கு வர உள்ளது.
தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், போட்டியிட சின்னம் முக்கியம் என்பதால் இந்த வழக்கு விசாரணை எப்போது வரும் என்பதை ராமதாஸ் தரப்பினர் உற்று நோக்கி வந்தனர். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications