மாம்பழம் சின்னம் யாருக்கு? சென்னை ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் ஆணை! ராமதாஸுக்கு பின்னடைவு!
சென்னை: அன்புமணிக்கு வழங்கப்பட்ட மாம்பழம் சின்னத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராமதாஸ். கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ராமதாஸ் மனு அளித்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய் மாலியா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் தரப்பில், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்குச் சொந்தம் என்பது தீர்மானமாகும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அன்புமணி தரப்பில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதம் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு தெரிவித்தது. இதையடுத்து மாம்பழம் சின்னத்தை எங்களால் தற்போது முடக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications