அரியலூர் வந்தால் அடி..! சேலம் வந்தால் உதை..! சூர்யாவுக்கு தொடரும் மிரட்டல்..!
நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்
சென்னை: சூர்யா, எனக்கு ஒரு லட்சம்லாம் வேண்டாம்.. அரியலூர் மாவட்டம் வந்தா நானே அடிப்பேன் என்று பாமக இளைஞர்கள் சிலர், சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் பதில் தந்திருந்தார்..

சூர்யா
ஆனாலும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது..

சினிமா
"ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்... இந்த பக்கம் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம்... இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்...

ஜாதி கலவரம்
இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்.. ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

அறிவிப்பு
இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நாம் சில சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.. அவர்கள் ஆதங்கத்துடன் நம்மிடம் சொன்னதாவது: "இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டவர் கட்சியின் மூத்த தலைவர்.. அதுவும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்.. வெளிப்படையாகவே, பகிரங்கமாகவே, சூர்யாவை தாக்க வேண்டும் என்று பேசியிருந்ததற்கு இதுவரை அக்கட்சியில் இருந்து யாருமே அவரை கண்டிக்கவில்லை.. குறைந்தபட்சம் வருத்தமும் சொல்லவில்லை..

வன்னியர்கள்
இதன் விளைவுதான் இப்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.. 1 லட்சம் வேணாம், இங்கு வந்தால் சூர்யாவை நாங்களே அடிப்போம் என்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள சில பாமக இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்களை பதிவிட்டு வருவது மிரட்டி வருவது மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. வன்னியர்கள் கெட்டவர்கள் போலவும், மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவது போலவும் படத்தை எடுத்து வைத்துள்ளனர் என்று பாமக தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்..

சூர்யா
அப்படி பார்த்தால், சூர்யாவை நாங்களே அடிப்போம் என்று ட்வீட் போட்டு மிரட்டுவது மட்டும் வன்முறையில் சேராதா? கலவரத்தை தூண்டிவிட்டது போல நிர்வாகி பழனிசாமியின் அறிவிப்பும் அமைந்துவிட்டது என்பதே உண்மை.. இப்போது சூர்யா ரசிகர்களும் இதற்கு எதிராக திரண்டு வந்தால், அதன்மூலம் ஏற்படும் வன்முறைக்கு யார் பொறுப்பேற்பது? சூர்யாவின் படமெல்லாம் இனி வடமாவட்டத்தில் ஓடுவது கடினம் என்று ஒரு மிரட்டலையும் சில பாமக இளைஞர்கள் சேர்த்து விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வன்மம்
இதில் வேதனை என்னவென்றால், நடிகர் சந்தானத்துக்கு பாமக இளைஞர்கள் திரண்டு வந்து முட்டுக் கொடுக்க ஆரம்பித்துள்ளதுதான். "சந்தானம் ஜாதி வெறியர் என்றால் இந்த இயக்குநர்கள் எல்லாம் என்ன வெறியனுகளா இருப்பான்?" என்று கேள்வியையும் இந்த இளைஞர்கள் எழுப்பி வருகிறார்கள். அடுத்தவர் மனம் நோகுமே என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல், காமெடி என்ற பெயரில் வன்மத்தை கரைத்து ஊற்றி கொண்டிருந்தவர் சந்தானம்..

மாற்று திறனாளிகள்
மாற்று திறனாளிகள் என்றும் பாராமல், உடல் உருவத்தை கேலி செய்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனம் என்பதுகூட தெரியாமல், சந்தானம் செய்த காமெடி தொல்லையை, தமிழக மக்கள் சகிப்புத்தன்மையுடன் இத்தனை காலமும் பொறுத்து கொண்டனர்.. ஆனால், சமூக மாற்றத்திற்கான ஒரு சீரியஸ் விவகாரத்தில், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, ஜாதி வன்மத்தை புகுத்த நினைப்பதைதான் யாராலும் அனுமதிக்க முடியாது. அதனால்தான் இன்று சோஷியல் மீடியாவில் சந்தானத்துக்கு எதிர்ப்பு கூடி வருகிறது.
Recommended Video

பாமக இளைஞர்கள்
அப்படிப்பட்ட சந்தானத்துக்கு இந்த பாமக இளைஞர்கள் முட்டுக் கொடுத்து பேசுவதை வேதனையாக உள்ளது.. அதுமட்டுமல்ல, யார், எந்தெந்த பதவிகளில், பொறுப்புகளில் உள்ளனர் என்பதைகூட அறியாமல், அடிப்படை நாகரீகமும் இல்லாமல், "கருத்துரிமை" என்ற பெயரில் தரம்தாழ்ந்து பாமக இளைஞர்கள் சிலர் விமர்சித்து கண்டிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த இளைஞர்களை எல்லாம் "பரிதாபத்துக்குரியவர்கள்" என்பதை தவிர வேறென்ன சொல்வது" என்று மனம் நொந்து தெரிவித்தனர்.
-
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி! -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications