எதிர்க்கட்சியா இருந்தாலும்.. “டாக்டர் ஐயா மனம் திறந்து பாராட்டச் சொன்னாரு” - ஜி.கே.மணி பேச்சு!
சென்னை : 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றது.
முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்றார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, முதல்வரின் கடந்த ஓராண்டுப் பணியை பா.ம.க சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். மனம் திறந்து பாராட்டுங்கள் என ராமதாஸ் கூறினார் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, தனது தலைமையிலான அரசு ஓராண்டில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் உரையைப் புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் என பலரும் தி.மு.க அரசை வாழ்த்திப் பேசினர்.

ராமதாஸ் பாராட்ட சொன்னார்
முதல்வரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, "முதல்வரின் அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு எதிர்க்கட்சி என்பதற்காக பேசாமல் இருக்க முடியுமா? இன்று காலை மருத்துவர் ஐயாவிடம் பேசினேன். இன்று கேள்வி நேரம் இல்லை. ஓராண்டு நிறைவு என்பதால், ஏதாவது பேச வேண்டி இருக்கும் என்று சொன்னேன். "மணி, மனம் திறந்து பாராட்டுங்கள்" என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

தமிழகம் தலைநிமிரட்டும்
மேலும், பேரவையில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அன்போடு அரவணைக்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். முதல்வரின் கடந்த ஓராண்டுப் பணியை, ஆட்சி கடந்து வந்த பாதையை, அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்து பா.ம.க சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களின் பணி தொடரட்டும், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கட்டும் எனப் பேசினார்.

உயிரையும் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, நடுநிலையோடு கூறவேண்டுமென்றால் கடந்த ஓராண்டு என்பது சாதாரண காலமல்ல. உலகையே உலுக்கிக் கொண்டிருந்த கொரோனா காலம். பெருந்தொற்றின்போது உயிரையும் பொருட்படுத்தாமல் எல்லா இடத்துக்கும் சென்று மக்களை காத்தவர் முதல்வர் ஸ்டாலின் என முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications