‛‛விவசாயிகளின் நண்பன்’’.. வேளாண் பட்ஜெட்டில் பாமக எம்எல்ஏக்கள் செய்த சம்பவம்! கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பச்சை துண்டு அணிந்து தாக்கல் செய்தார். அதேபோல் பட்ஜெட் தாக்கலின்போது பாமக எம்எல்ஏக்கள் பச்சை துண்டு அணிந்து பங்கேற்று கவனம் ஈர்த்தனர்.

தமிழக சட்டசபையின் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

 PMK MLAs wear green Shawl and participates Tamil Nadu Agriculture Budget 2024-25

தமிழகத்தில் வேளாண் துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அவர் முதலில் பட்டியலிட்டார். அதன்பிறகு 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், புதிய அறிவிப்புகளை அவர் கூறி வருகிறார்.

இந்த பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பச்சை நிற துண்டு அணிந்து பட்ஜெட் உரையை வாசித்தார். விவசாயிகளின் அடையாளமாக பச்சை துண்டு உள்ளது. இந்நிலையில் தான் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதேபோல் வேளாண் பட்ஜெட்டையொட்டி பாமக எம்எல்ஏக்களும் பச்சை துண்டு அணிந்து சட்டசபையில் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தம் 5 பாமக எம்எல்ஏக்கள் உள்ளனர். பென்னாகரம் தொகுதியில் ஜிகே மணி, சேலம் மேற்கு தொகுதியில் அருள், தருமபுரியில் வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் பாமக எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று சட்டசபைக்கு பச்சை நிற துண்டு அணிந்து வந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+