பாமகவை அழிக்க வந்த துரோகி.. எல்லா பிரச்சனைக்கும் அவர் ஒருவரே காரணம்.. ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி!
சென்னை: பாமகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தான் காரணம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. மாவட்டச் செயலாளர் நியமனத்திற்கு கூட லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி, அவர் பாமகவின் துரோகி என்றும் விமர்சித்துள்ளார்.
பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், கட்சியை தனது கையில் எடுக்க அன்புமணி முயன்று வருகிறார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திலேயே, ராமதாஸின் கொள்கையை கையில் எடுத்து முன்னேறி செல்வோம் என்று கூறி இருந்தார்.

ராமதாஸ் vs அன்புமணி
இதனைத் தொடர்ந்து பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் 31 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் அறிவித்தார். ஒவ்வொரு நாளும் ராமதாஸ் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட, இன்னொரு பக்கம் அன்புமணி ராமதாஸ் அவர்களை கட்சிப் பதவியில் தொடர்கிறார்கள் என்று அறிவித்தார். இதனால் போட்டி பொதுக்குழு நடத்தவே ராமதாஸ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது.
தைலாபுரம் வந்த அன்புமணி
இதனிடையே ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்த சீனியர்கள் முயன்று வந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை சந்திக்க தைலாபுரத்திற்கு வந்துள்ளார் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையில் இருக்கும் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புமணி வீடியோ
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் பாமகவை அழிக்க வந்த துரோகி என்று பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி பேசுகையில், உங்களுக்கு இடையில் கோஷ்டி பூசல் இருக்கிறது. அதனை களைந்துவிட்டு கட்சிப் பணிகளை செய்ய வேண்டும். இந்த கோஷ்டிகளுக்கு காரணம் ஒரே நபர் தான். அது யாரென்றால் அன்பழகன் தான்.
பாமகவின் துரோகி
15 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் வந்து ராமதாஸ் காலினை பிடித்து பொறுப்பு வாங்கினார். பின் மாவட்டச் செயலாளர் பதவியை விற்க தொடங்கி, சமுதாயத்தை அழித்து வந்தார். இதனை நினைத்தால் வருத்தமாக உள்ளது. கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி அவர். நான் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், ஒரு நபர் கூடவே இருக்கிறார்.
அன்புமணி ஆதங்கம்
வயிறெச்சலில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அமைதியாக இருக்கிறேன்.. மனதில் நிறைய உள்ளது. நிர்வாகிகள் தைரியமாக இருங்கள்.. அனைவருக்கும் பொறுப்பு, பதவி என்று என்ன செய்ய வேண்டுமோ, அதனை நிசச்யம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு பாமகவினர் இடையே வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications