என் காலை பிடித்து! மகனை விடுங்க.. மருமகள் சௌமியா பற்றி கூட இப்படியா பேசுறது.. ராமதாஸ் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் . மகனோடு நிற்காமல் தனது மருமகள் குறித்தும்.. அவர் தனது காலில் விழுந்தார் என்பது குறித்தும் ராமதாஸ் பேசி இருப்பது கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்துள்ளது. மருமகள் பற்றிய ராமதாஸ் பேச்சு நாகரீகமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் மருமகள் சௌமியா ராமதாஸ் பற்றி பேசுகையில், நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயலாகும். உண்மையில் தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான். எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்தேன்.
தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆட தொடங்கியது அன்புமணி தான். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் மேடை நாகரிகம் எதுவுமே இல்லாமல் நடந்து கொண்டது யார்?"

Anbumani Ramadoss pmk Ramadoss

கட்சியின் நிர்வாகக் குழுவில் யாராவது பேசினாலே அன்புமணி அவர்களை அடக்குவார். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நான் சொல்வது 'என்னை விமர்சியுங்கள்' என்பதுதான்; அப்படி எந்த தலைவரும் சொல்லியதில்லை, அப்படியெல்லாம் இந்த கட்சியை வளர்த்தேன். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார்

அன்புமணி கூசாமல் பொய் சொல்வார். உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அவர் கூறியது பொய். தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல. எனக்கு விருப்பம் இல்லாமலேயே எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு Health Minister பதவியை வாங்கிக் கொடுத்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் 3 இடங்களாவது வென்றிருப்போம், அதிமுக 6 இடங்களுக்கு மேல் வென்றிருப்பார்கள். எங்களுக்கு சின்னமும் கிடைத்திருக்கும். அதிமுக - பாமக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி.

அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 3 தொகுதி வெற்றி பெற்றிருப்போம். சின்னமும் கிடைத்திருக்கும்.. பாஜக உடன் கூட்டணி வைக்கச் சொல்லி என் காலைப் பிடித்து அழுதவர் அன்புமணி. பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால், 'நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்கணும்' என அன்புமணி என்னை மிரட்டினார். அவரும், சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதனர். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கூட்டணிக்கான எல்லா ஏற்பாட்டையும் சௌமியாவே செய்துவிட்டார். மறுநாள் காலை வாசலில் 'பாரத் மாதா கி ஜே' என கோஷம் கேட்கிறது. இது அனைத்தும் எனக்கு தெரியாமலேயே நடந்தது

கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி ஏறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர்மீது படவில்லை. புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்துகொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை.

வளர்த்த கிடாவே என் மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார் என்று அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதில் அவரும், சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதனர். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கூட்டணிக்கான எல்லா ஏற்பாட்டையும் சௌமியாவே செய்துவிட்டார் என்று மருமகள் குறித்தே ராமதாஸ் கடுமையாக பேசி இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+