“பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆன பின்னரும்.. ஆட்சிக்கு வராமல் இருப்பது வருத்தமே” - அன்புமணி
சென்னை: பாட்டளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் ஆட்சிக்கு வராமல் இருப்பது வருத்தமளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது, "மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்கு அனுப்பி, நம்முடைய ஆட்சி அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த பொதுக்குழு இங்கே வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று நம்முடைய பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து, நாம் எப்படி வெற்றி பெற இருக்கின்றோம் என்ற செய்தியை சொல்லி, இன்னும் பத்து மாதத்திலே சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வர இருக்கிறது, அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் நம் கட்சியை பலப்படுத்த வேண்டும், இன்னும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், இளைஞர்களை அழைத்து வரவேண்டும் என்ற செய்திகளை சொல்லத்தான் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
கள்ளக்குறிச்சி, மிக பின்தங்கிய மாவட்டம். நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி, மருத்துவர் அய்யா 36 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். தொடங்கிய நோக்கம் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்பதுதான்.
எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. என்னவென்றால், இன்னும் கட்சி ஆட்சிக்கு வரவில்லையே என்பதுதான். 36 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கட்சி, தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ சாதனைகள் செய்த கட்சி, இந்தியாவுக்கு எவ்வளோ மாற்றங்களை கொண்டு வந்த கட்சி, நம் கட்சிக்கு அனைத்து தகுதிகளும் திறமைகளும் இருக்கிறது. செயல் திட்டம் இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது. எத்தனையோ சாதனைகள் செய்திருக்கின்றோம்.
ஆனாலும், மக்கள் நம் மீது இன்னும் கூடுதலாக நம்பிக்கை வைக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் ஆட்சிக்கு வர முடியும். எல்லாம் நமக்கு இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் கோடான கோடி என் தம்பிகளும் தங்கைகளும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள் அதற்கு ஒரு அத்தாட்சி கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு மாநாடு" என்று பேசியுள்ளார்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications