அச்சச்சோ.. கார் விபத்தில் சிக்கிய அன்புமணியின் மனைவி சவுமியா.. திண்டிவனம் ரோட்டில் என்னாச்சு..?
சவுமியா அன்புமணி, திண்டிவனம் கார் விபத்தில் காயமின்றி உயிர்பிழைத்தார்
சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இந்த விபத்தில் சவுமியா, காயமின்றி தப்பியது, தைலாபுரத்தில் நிம்மதியை தந்துள்ளது.
டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா.. தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பவர் சவுமியா அன்புமணி.. ஆனால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், சவுமியாவுக்கும் சீட் தரப்படப்போவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் பரபரக்கும்.
அரசியலில் ஈடுபடாவிட்டாலும், பிற நற்காரியங்களில் சவுமியா அன்புமணி தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.. குறிப்பாக, பசுமைதாயகம் பெயரில் பல்வேறு விழிப்புணர்வினை வருடந்தவறாமல் ஊட்டி வருகிறார்..

விஜயகாந்த்
ரமணா படத்தில் விஜயகாந்த் பேசுவாரே, அதே போல, புள்ளிவிவரங்களுடன் கூடிய முக்கிய தரவுகளை தன்னுடைய விழிப்புணர்வு பேச்சுக்களில் வெளிப்படுத்தி அசரடித்து விடுவார் சவுமியா.. இந்நிலையில், சவுமியா சென்ற கார் திடீர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.. எனினும் இந்த விபத்தில் சிறிய காயமின்றி சௌமியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு டொயோட்டா இன்னோவா காரில் சவுமியா சென்று கொண்டிருந்தார்...

சடன் பிரேக்
அப்போது திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள பாதிரி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர டீக்கடையில் இருந்து கார் ஒன்று திடீரென சாலையில் திரும்பியது.. அந்த நேரம்பார்த்து, சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக, காரை ஓட்டி வந்தவர் திடீரென பிரேக் அடித்துள்ளார்... அப்போது பின்னால் சவுமியா அன்புமணி வந்த கார் உள்பட 5 கார்கள் புறவழிச்சாலையில் ஏறிய கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன..

தைலாபுரம் தோட்டம்
இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களும் லேசான சேதமடைந்தன.. அந்தவகையில், சவுமியாவும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதிரிகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.30 மணிக்கு கார் வந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.. 5 டிரைவர்களும் ஒன்றாக, ஒரே சமயத்தில் பிரேக் போட்டதால், மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.. ஆனால் கார்கள் மட்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன..

தைலாபுரம்
இதில், சவுமியா காரின் பின்பக்கமும் மோதியதால், கார் பகுதியின் முன் மற்றும் பின் பகுதி லேசான சேதம் அடைந்தன.. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார், போக்குவரத்தை உடனடியாக சீரமைத்தனர். எனினும், கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்... இறுதியில், சவுமியா அன்புமணி வேறு கார் மூலம், தைலாபுரம் தோட்டத்துக்கு கிளம்பி சென்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications