சோதனை மேல் சோதனை! பொன்முடி மகன் கவுதம சிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கில் நாளை குற்றச்சாட்டு பதிவு!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. பொன்முடியின் மகனும் திமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கவுதம சிகமாணி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.
2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி. அப்போது செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம சிகமாணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதே வழக்கின் அடிப்படையில் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் கீழ் பொன்முடி, கவுதம சிகமாணி உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது.
மேலும் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. பின்னர் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை 12-வது கூடுதல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு முன்னர் 12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையில் கவுதம சிகாமணி ஆஜராகவில்லை. மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கவுதம சிகாமணி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிவில் நாளைய தினம் ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு நாளை நடைபெறும் விசாரணையின் போது கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. ஆகையால் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
அண்மையில் கவுதம சிகாமணியின் தந்தை பொன்முடி, அவரது தாயார் விசாலாட்சி ஆகியோருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications