PMMY: முத்ரா’ கடன் திட்டத்தில் அசத்தும் தமிழ்நாடு.. மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் 'முத்ரா' கடன் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. சிசு பிரிவில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் பிரிவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், தருண் பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், தருண் பிளஸ் பிரிவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. சிசு பிரிவில் 1 கோடியே 39 லட்சத்து 63 ஆயிரத்து 396, கிஷோர் பிரிவில் 79 லட்சத்து 8 ஆயிரத்து 720, தருண் பிரிவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 760 பேரும் கடன் பெற்றுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'முத்ரா' கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, சுய தொழில் தொடங்குவதற்காக எந்த பிணையமும் இல்லாமல் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

என்னென்ன பிரிவில் கடன்கள்
அதாவது, சிசு பிரிவில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் பிரிவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், தருண் பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், தருண் பிளஸ் பிரிவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வெவ்வேறு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
முத்ரா கடன் வட்டி விகிதம்
பொதுத்துறை வங்கிகளில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வட்டி விகிதங்கள் பொதுவாக ஆண்டுக்கு 9.15% முதல் 12.80% வரை இருக்கும். வட்டி விகிதங்கள் பொதுவாக வங்கிக்கு வங்கி மாறுபடுவது வழக்கம். பெரும்பாலும் வட்டி விகிதங்கள் விண்ணப்பிப்பர்களின் கடன் வரலாறு (சிபில் ஸ்கோர்) மற்றும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும்
இந்தியாவில் 2026 வரை முத்ரா கடன் விவரங்கள்
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சிசு பிரிவில் 15 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 38, கிஷோர் பிரிவில் 5 கோடியே 85 லட்சத்து 79 ஆயிரத்து 480, தருண் பிரிவில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 123, தருண் பிளஸ் பிரிவில் 15 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரத்து 138 பெண் தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முத்ரா கடன் அளவுகள்
தமிழகத்தை பொறுத்தமட்டில் இதே காலக்கட்டத்தில் சிசு பிரிவில் 1 கோடியே 39 லட்சத்து 63 ஆயிரத்து 396, கிஷோர் பிரிவில் 79 லட்சத்து 8 ஆயிரத்து 720, தருண் பிரிவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 760, தருண் பிளஸ் பிரிவில் 1 கோடியே 69 லட்சத்து 9 ஆயிரத்து 630, புதுச்சேரியில் சிசு பிரிவில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 373, கிஷோர் பிரிவில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 138, தருண் பிரிவில் 1,641, தருண் பிளஸ் பிரிவில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 38 பெண் தொழில் முனைவோர் பயன் பெற்றுள்ளார்கள்.
முத்ரா கடன் தரும் வங்கிகள்
முத்ரா கடன்களை பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற 27 பொதுத் துறை வங்கிகள் வழங்குகின்றன. அதேபோல், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிட்டி யூனியன் பேங்க் போன்ற 18 தனியார் வங்கிகளும் வழங்குகின்றன. அதேபோல் பல்வேறு மைக்ரோ நிதி சேவை நிறுவனங்கள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளும் முத்ரா கடன்கள் வழங்குகின்றன.
முத்ரா கடன் பெறுவது எப்படி
நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் உத்யாமி மித்ரா இணையதளத்திற்கு (UdyamiMitra) செல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண்ணை உள்ளிட வேண்டும். மொபைல் எண்ணிற்குக் கிடைக்கும் OTP-ஐ உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பத்திற்குள் நுழைய வேண்டும்.
தொடர்ந்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் அது பகுப்பாய்வு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு தரப்படும் சமர்ப்பிப்பு எண் கொண்டு, விண்ணப்பத்தின் நிலையை இதே இணையதளத்தில் காணமுடியும். சரியான சான்றிதழ்கள் இருப்பின், விரைவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இல்லையென்றால் அதற்கான காரணத்தை விண்ணப்ப சமர்பிப்பு எண் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications