அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பான திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கோயில் அறங்காவலர் குழு நியமன பொறுப்புகளில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைமை அமைத்த 'கள ஆய்வுக்குழு' தனது விரிவான அறிக்கையை அறிவாலயத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை மண்டலத்தின் முக்கியப் புள்ளியும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருப்பது திமுக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சேகர்பாபு அமைச்சராக இருந்த போது அவர் எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளே கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பு வகித்த போது, கோயில்களில் அமைக்கப்பட்ட நியமன பொறுப்புகளில் பாரபட்சமும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த, பாரம்பரியமிக்க திமுக உடன்பிறப்புகளுக்குக் கோயில் அறங்காவலர் குழுக்களில் உரிய முக்கியத்துவமும் பதவிகளும் வழங்கப்படவில்லை என்றும், மாறாக, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கும், 'தனக்கு வேண்டியவர்களுக்கும்' மட்டுமே மிக முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிரான உள்ளடி வேலைகளாக மாறி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கள ஆய்வுக்குழு தனது அறிக்கையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் தோல்விக்கு சேகர்பாபு முறையாக பணியாற்றாததே காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. சேகர்பாபு பெயரளவில் மட்டுமே தேர்தல் பணிகளை செய்ததாலேயே ஸ்டாலின் தோல்வி அடைந்தார் என்று திமுகவினரே விமர்சித்து வருகின்றனர். இதனால் சேகர்பாபு மீது நடவடிக்கை பாயுமா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications