ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஒரு காலத்தில் 'கோடிங்' தெரிந்திருந்தால் போதும், கைநிறைய சம்பளத்துடன் ஒரு சிறந்த எதிர்காலம் நிச்சயம் என்ற நிலை இருந்தது. ஆனால், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, இந்த பிம்பத்தை உடைக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாகச் சமீபத்தில் எலான் மஸ்க் கூறியுள்ள கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் AI கருவிகள் நாம் எழுதும் கோடிங்கில் அடுத்த வரி என்னவாக இருக்கும் என்று பரிந்துரை செய்யும் அளவில் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட் கோட்' (Claude Code) மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் 'கோடெக்ஸ்' போன்ற புதிய கருவிகள், ஒரு முழுமையான சாப்ட்வேர் கட்டமைப்பையே தானாகக் கையாளும் திறன் கொண்டவை.

Elon Musk AI IT

எலான் மஸ்க் எச்சரிக்கை

இவை வெறும் கோடிங் மட்டும் செய்வதில்லை.. சாப்ட்வேரை டெஸ்ட் செய்வது, அதில் உள்ள பிழைகளைத் திருத்துவது (Debugging) மற்றும் அந்த சாப்ட்வேரை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது என அனைத்தையும் மனித உதவியின்றிச் செய்கின்றன. இதற்கிடையே டெஸ்லா தலைவரான எலான் மஸ்க், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கோடிங் துறையின் எதிர்காலம் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைக் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், "இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை முற்றிலும் மாறிவிடும். நீங்கள் கோடிங் செய்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. AI நேரடியாக பைனரி பைல்ஸ்களை உருவாக்க ஆரம்பிக்கும்" என்றார்.

அதென்ன பைனரி?

பொதுவாக மனிதர்கள் 'ஜாவா' அல்லது 'பைதான்' போன்ற மொழிகளில் கோடிங் எழுதுவார்கள். இதை கம்ப்யூட்டருக்கு புரியும் மொழியாக (0 மற்றும் 1 எனப்படும் Binary) மாற்றுவதற்கு கம்பைலர் என்ற சாப்ட்வேர் தேவைப்படும். ஆனால், எலான் மஸ்க் சொல்வது என்னவென்றால், இனி மனிதர்கள் கோடிங் எழுத வேண்டிய அவசியமே இருக்காது. AI நேரடியாகக் கணினிக்குப் புரியும் பைனரி மொழியிலேயே மிகத் துல்லியமான சாப்ட்வேரை உருவாக்கிவிடும். இதன் மூலம் கோடிங் என்ற வேலையே இல்லாமல் போய்விடும் என்கிறார் அவர்.

மாற்றம் ஆரம்பித்துவிட்டது

இது வெறும் கணிப்பு மட்டுமல்ல, ஏற்கனவே இந்த மாற்றம் வரத் தொடங்கிவிட்டது. கோடிங்கில் வேலைவாய்ப்புகளும் குறையத் தொடங்கிவிட்டன. 'ரெவெலியோ லேப்ஸ்' மற்றும் உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, சாப்ட்வேர் துறையில் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகள் 35% சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் இப்போது ஜூனியர் புரோகிராமர்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக, AI கருவிகளைப் பயன்படுத்தி வேலைகளை முடிக்கத் தொடங்கியுள்ளன. இது சாப்ட்வேர் படிக்கும் மாணவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்த்ரோபிக்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி கடந்த ஆண்டே இது குறித்து எச்சரித்திருந்தார். AI தொழில்நுட்பத்தால் ஒயிட் காலர் வேலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அழியக்கூடும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் 10% முதல் 20% வரை உயரக்கூடும் என்றும் எச்சரித்திருந்தார். அதேநேரம் இன்னும் சிலர், AI வேலைகளைப் பறிக்காது, மாறாக மனிதர்கள் செய்யும் வேலையின் தரத்தை உயர்த்தும் என்கிறார்கள். மேலும், தற்போதுள்ள வேலைகள் போனாலும் புதிய வேலை வாய்ப்புகளை ஏஐ உருவாக்கும் என்கிறார்கள்.

தொழில்நுட்பம் மாறும்போது, நாமும் நம்மை மாற்றிக்கொள்வது அவசியம். இனி கோடிங் தெரிந்திருப்பது மட்டும் போதாது. AI கருவிகளை எப்படித் திறமையாகப் பயன்படுத்தி ஒரு வேலையை முடிப்பது மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி என்ற திறன்களை வளர்த்துக்கொள்வதே வருங்காலத்தில் சிறந்த ஒரு வழியாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+