உதயநிதி வீட்டுக்கு சென்ற வைரமுத்து.. “தாத்தாவிடம் இருந்த அந்த நிதானம் இப்போதே”.. வைரமுத்து ட்வீட்!
சென்னை: கவிஞர் வைரமுத்து, தனது மகனும் கவிஞருமான மதன் கார்க்கியுடன் சென்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து. அப்போது அவருடன் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் சென்றுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிதானத்தை இந்த வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அடைந்திருக்கிறார், தலைமைப் பண்புகளின் தனிக் குணங்களைக் கொண்டிருக்கிறார் என வியந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களை
நானும் மகன் மதன் கார்க்கியும்
முகாம் அலுவலகத்தில்
சந்தித்து மகிழ்ந்தோம்.
அந்த வயதில் அவர் தாத்தா
அடைந்த நிதானத்தை
இந்த வயதில்
உதயநிதி அடைந்திருக்கிறார்.
பதற்றப்படாத உடல்மொழி,
அவசரம் இல்லாத வாக்கியங்கள்,
புன்னகையில்
நனைந்துவரும் வார்த்தைகள்,
எதிராளியைப்
பேச விட்டுக் கேட்கும்
பெருந்தன்மை,
சக மனிதர் மீது அக்கறை
இவையெல்லாம்
தலைமைப் பண்புகளின்
தனிக் குணங்கள்
வாய்த்திருக்கிறது
உதயநிதிக்கு
வாழ்த்தி
விடைகொண்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications