நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு! முறைசெய்யும் நீதித்துறையை கறைசெய்யும் களங்கம்- வைரமுத்து கண்டனம்
சென்னை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச்சு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்த நிலையில் காலணி வீசிய வழக்கறிஞருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்
தலைமை நீதியரசர்
@JusticeBRGavai
மீது
அநாகரிகத்தை
வீசமுயன்றது கண்டு
அதிர்ந்துபோனேன்
இது
முறைசெய்யும் நீதித்துறையைக்
கறைசெய்யும் களங்கமாகும்
வரம்புமீறிய வழக்கறிஞரை
வன்மையாகக் கண்டிக்கிறேன்
பிற்போக்குத்தனம்தான்
இந்த அவமானச் செயலுக்கு
அடிப்படை என்று அறிகிறேன்
தென்னிந்தியாவில்
பிற்போக்குச் சக்திகளைப்
பிடரிபிடித்துத் தடுத்து
நிறுத்தியதைப்போல
வடஇந்தியாவில்
செய்யத் தவறிவிட்டார்கள்
அந்தச் சாத்திரத்தின்
ஆத்திரம்தான் இது
காலில் அணியவேண்டியதைக்
கையில் அணிந்தபோதே
அவர் அறிவழிந்துபோனார் என்று
அறிய முடிகிறது
அதை
மென்மையாகக் கையாண்ட
நீதியரசரின் சான்றாண்மையைப்
பெரிதும் போற்றிப்
பெருமிதம் கொள்கிறோம்
நீதியரசரின் மாண்பு
அவரை மன்னித்துவிட்டது
வீச முயன்ற பொருளும்
அவரிடமே
ஒப்படைக்கப்பட்டு விட்டது
வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்
அவர் பேசியபொருளை
மறந்துவிட முடியாது
அது
நாட்டின் பெரும்பான்மை மக்களைக்
காலங்காலமாய்க்
கழுத்தில் மிதித்து
அழுத்திக் கொண்டிருக்கும்
பழைய பொருளாகும்
பழையன கழிய வேண்டாமா? இவ்வாறு வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அது போல் முதல்வர் ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்
— வைரமுத்து (@Vairamuthu) October 7, 2025
தலைமை நீதியரசர்@JusticeBRGavai மீது
அநாகரிகத்தை
வீசமுயன்றது கண்டு
அதிர்ந்துபோனேன்
இது
முறைசெய்யும் நீதித்துறையைக்
கறைசெய்யும் களங்கமாகும்
வரம்புமீறிய வழக்கறிஞரை
வன்மையாகக் கண்டிக்கிறேன்
பிற்போக்குத்தனம்தான்
இந்த அவமானச் செயலுக்கு
அடிப்படை என்று அறிகிறேன்…
உச்சநீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல் நீதிமன்ற நடவடிக்கைகள் (Court Proceedings) நீதிமன்றம் 1இல் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயின் கருத்துகளால் அதிருப்தி அடைந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கவாயின் மீது வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து காலணியை பறித்து அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையின் போதுதான் கவாய் மீது காலணி வீச்சு நடந்தது. இந்த சம்பவம் குறித்து கவாய் கூறுகையில் இதற்கெல்லாம் கவனத்தை சிதறவிடக் கூடாது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்.
இது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது என கூறியிருந்தார். இந்த நிலையில் கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பார் கவுன்சில் அதிரடியாக எடுத்துள்ளார். மேலும் காலணி வீச்சு குறித்து தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ராகேஷ் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications