திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் பாடலாசிரியர் புலமைப்பித்தன்... வைரமுத்து புகழஞ்சலி
சென்னை: திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் மறைந்த கவிஞர் பாடலாசிரியர் புலமைப்பித்தன் என்று கவிப்பேரரசு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுளார்.
முதுபெரும் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புலமைப்பித்தன் (வயது 86) எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் காலத்தால் அழியாத பல காவியங்களை பாடல்களாக கொடுத்தவர் கவிஞர் புலமைப்பித்தன். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர்.

வயது முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள புகழஞ்சலி:

தமிழ்க் கலைஉலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்
அவருடைய பல பாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை
தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்
அவர் மறைவு
துயரம் தருகிறது
குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications