'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?' பாடகி சுசீலா குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: கவிஞர் வைரமுத்து பழம்பெரும் பாடகி சுசீலா உடனான படத்தைப் பகிர்ந்து, நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
உலகெங்கும் புத்தாண்டு தினம் கோலாகலமாகப் கொண்டாடப்பட்டது. ஓமிக்ரான் அச்சத்திற்கு மத்தியில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்

கொரோனா உடனான போரில் வேக்சின் என்பது நமக்குக் கிடைத்த பேராயுதமாக உள்ளது. இந்த ஆயுதத்தைக் கொண்டு கொரோனாவை இந்த ஆண்டு வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் கவிஞர் கவிஞர் வைரமுத்து பழம்பெரும் பாடகி சுசீலா உடனான படத்தைப் பகிர்ந்து, நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், "'புத்தாண்டுக்குப் பார்க்க வேண்டுமே' என்றேன்... 'உடல்நலக் குறைவால் உருமாறிக் கிடக்கிறேன்' என்றீர்... 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?' என்றேன்.. சில்லென்று சிரித்தீர்.. அது மோகனமா? பூபாளமா? சொல்லுங்கள் சுசீலா அம்மா!" என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும், பாடகி சுசீலா உடன் இருக்கும் படத்தையும் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள நிலையில், இதை ட்விட்டரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications