போலந்து டூ சென்னை.. பார்சலில் வந்த கொடிய விஷமுடைய அரிய வகை சிலந்திகள்.. திறந்து பார்த்து ஷாக்
சென்னை: போலந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்த ஒரு பார்சலில் கொடிய விஷமுடைய 107 சிலந்தி பூச்சிகள் உயிருடன் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது
கொடிய விஷமுடைய சிலந்திகள் அடங்கிய அந்த பார்சலை மீண்டும் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
போலந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று மாலை சென்னை பழைய விமானநிலையம் வந்தது.அதில் வந்த சரக்கு பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

மாசலா பொருள்
அப்போது ஒரு பார்சல் அருப்புக்கோட்டை முகவரிக்கு வந்திருந்தது. அந்த பார்சலில் சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சுங்கத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த பார்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணை தொடா்பு கொண்னா். அவைகள் போலியானவை என்று தெரியவந்தது.

சிலந்திகள்
இதையடுத்து இன்று காலையில் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். .அதனுள் கண்ணாடி கூம்புகளுக்குள் உயிருடன் கூடிய சிலந்தி பூச்சிகள் இருந்தன.மொத்தம் 107 கூம்புகளில் 107 சிலந்தி பூச்சிகள் இருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறையினனா்.சென்னை பெசண்ட்நகரில் உள்ள மத்திய வனக்குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.

அரிய வகை சிலந்தி
அவா்கள் விரைந்து வந்து சிலந்தி பூச்சிகளை ஆய்வு செய்தனா்.அவைகள் அனைத்தும் கொடிய விஷத்தனமையுடவைகள்.மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் உள்ள அடா்ந்த வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படுபவைகள். மேலும் இவைகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால்,அதனால் வெளிநாட்டு நோய் கிருமிகள் நமது நாட்டில் பரவிவிடும் என்று அலார்ட் செய்தனர்.

திருப்பி அனுப்ப முடிவு
இதையடுத்து சுங்கத்துறையினா் இந்த சிலந்தி பூச்சிகள் அடங்கிய பார்சலை மீண்டும் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனா்.அதோடு சுங்கத்துறையினா் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

சதி நடக்கிறதா
கொடிய விஷம் கொண்ட சிலந்திப்பூச்சிகளை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது யார்? எதற்காக இறக்குமதி செய்கின்றனா்?எதாவது நாசவேலைக்கான சதித்திட்டம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications