கல்லூரியில் கத்தி கட்டை! கேங்க்ஸ்டர்களாக மாறிய மாணவர்கள்! எப்டி அடிச்சுக்குறாங்க பாருங்க! பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அண்ணாநகர் அருகே புதுக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended Video

    கல்லூரியில் கத்தி கட்டை! கேங்க்ஸ்டர்களாக மாறிய மாணவர்கள் - வீடியோ

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் தங்களுக்குள் அடிக்கடி கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வகுப்பறைக்குள்ளாகவே ஆசிரியர்களை மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவற்றை தடுக்க அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.

    சென்னையில் அதிர்ச்சி

    சென்னையில் அதிர்ச்சி

    கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆசிரியர்களுக்கு அடங்காமல் அவர்களை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, அரசு பேருந்துகளிலும் வகுப்பறைகளிலும் மது அருந்துவது , சக மாணவர்களை ராகிங் செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சென்னை அண்ணாநகர் அருகே புதுக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்குள் மோதல்

    மாணவர்களுக்குள் மோதல்

    சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஒசாமா, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்தில் measi இன்ஸ்டியூட்டில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். அதே போல் மண்ணடியை சேர்ந்த அப்துல்ரஹீம்(21) என்பவர் புதுக்கல்லூரியில் பிகாம் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக புதுக்கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையே கல்ச்சுரல் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யார் பங்குபெறுவது என்பது தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    சரமாரி தாக்குதல்

    சரமாரி தாக்குதல்

    இதனை தொடர்ந்து ஒசாமா நேற்று அதே கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரான ராயப்பேட்டையை சேர்ந்த ரக்கியூப்அகமது என்பவரை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரக்கியூப் தனது நண்பர்களை அழைத்து வந்து கல்லூரி முடிந்து வெளியே வந்த ஒசாமா மற்றும் அப்துல்ரஹீம் ஆகிய இருவரை உருட்டுக்கட்டை, பால்டாப்பா, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இதில் பலத்த காயமடைந்த ஒசாமா, அப்துல்ரஹீம் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து ஒசாமா அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் மாணவர் ரக்கியூப்அகமது, முசாதிக்,உமர்பரூக், உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+