காதலை வெளிப்படையாக உடைத்த திரிஷா! அதுவும் லேட்டஸ்ட் ஸ்டோரி ஹைலைட்
சென்னை: நடிகை திரிஷா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். சமீபத்தில் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், அந்த நிகழ்ச்சிக்காக எடுத்த புகைப்படங்களையும் பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளன.
வைரலாகும் புகைப்படங்கள்
பதவியேற்பு விழாவிற்கு கிளம்புவதற்கு முன்பு திரிஷா எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக அவர் அணிந்திருந்த நீல நிற பட்டு சேலை, அதற்கேற்ற நகைகள் மற்றும் எளிமையான அலங்காரம் என எல்லாம் சேர்ந்து அவரது லுக்கை மேலும் சிறப்பாக காட்டியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்களை வெளியிடுவதற்காக காத்திருந்த ரசிகர்கள், "இப்போதான் வந்துச்சு" என்று உற்சாகமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

திரிஷாவின் இன்ஸ்ட்டா பதிவு
இந்த பதிவுகளுக்குள் முக்கியமாக பேசப்பட்ட விஷயம், திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பயன்படுத்திய பாடல் தான். "காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" என்ற காதல் பாடலை சேர்த்து, "காதல் எப்போதும் உரக்க பேசும்" என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருந்தது ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து, திரிஷா வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்துவிட்டதா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

ரசிகர்கள் கேள்வி
ரசிகர்கள் பலரும் "யார் அந்த அதிர்ஷ்டசாலி?", "தலைவி காதலிலா?", "விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்" என தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள். திரிஷாவின் பிறந்தநாள்களில் கூட "இந்த வருடமாவது கல்யாணம் நடக்க வேண்டும்" என்று வேண்டிக்கொள்வது ரசிகர்களின் வழக்கம் என்பதால், இந்த பாடல் தேர்வு அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
முன்னதாக தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவின் நிச்சயதார்த்தம் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அந்த உறவு நிறுத்தப்பட்டதாக திரிஷா கூறியிருந்தார். "சினிமாவே என் வாழ்க்கை" என்று அவர் வெளிப்படையாக கூறியதால், தற்போது அவரின் வாழ்க்கையில் யாராவது இருந்தால், அந்த நபர் அவரது கேரியரை மதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
விஜய் பதவி ஏற்பு பங்க்ஷன்
இதற்கிடையில், விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா நடந்து கொண்ட விதமும் அதிகமாக பேசப்பட்டது. அரங்கிற்குள் வந்தவுடன் அனைவரையும் பார்த்து கை அசைத்தது, ஷோபா சந்திரசேகரை கட்டிப்பிடித்தது, மேலும் விஜய் மேடையில் பேசும்போது கண்கலங்கியபடி பார்த்தது போன்ற தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த நாள் திரிஷா முகத்தில் இருந்த கூடுதல் சந்தோஷம் குறித்து கூட பலரும் கருத்து தெரிவித்தனர்.

இவ்வாறு ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகள் பரவி கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் அவரது சினிமா பயணமும் தொடர்ந்து கவனம் பெற்றுக் கொண்டிருக்கிறது. சூர்யா உடன் இணைந்து நடித்துள்ள "கருப்பு" திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்களுக்கு நோ டென்ஷன்
மொத்தத்தில், விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் எதுவாக இருந்தாலும், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய ஸ்டைலில் முன்னேறிக் கொண்டிருக்கும் திரிஷா, ஒரு பாடல் மற்றும் ஒரு பதிவின் மூலம் மீண்டும் இணையத்தை பரபரப்பாக்கியுள்ளார். தற்போதைக்கு அவர் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், "இது உண்மையிலேயே காதலா அல்லது ரசிகர்களின் கற்பனையா?" என்ற கேள்வி தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications