திமுக பிரமுகரின் தலை துண்டிப்பு! தலையில்லா முண்டத்துடன் 3 நாட்கள் வீட்டுக்குள்! திணறவைத்த தமீம் பானு
சென்னை : சென்னை ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலைசெய்து உடலை வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததோடு, அவரது தலை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணாமல் போன தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மணலி பேசின் பாலம் சாலையை சேர்ந்தவர் சக்கரபாணி வயது 65 திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக உள்ளார். சக்கரபாணி அப்பகுதியிலுள்ள வியாபாரிகள், மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல.. இறந்தவர்களும் தமிழர்கள்தானே.. கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் மணலி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குடியிருந்த ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாகவும் அதனை தொடர்ந்து வாங்குவதற்காக கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் சென்றுள்ளார் சக்கரபாணி.

சென்னையில் அதிர்ச்சி
ஆனால் அவர் திரும்பவும் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நான்கு நாட்களாக சக்கரபாணி காணவில்லை என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் மூன்றாவது சந்து பகுதியில் கடைசியாக சிக்னல் இருந்ததாகத் தெரிவித்தன் அடிப்படையில் தமீம் பானு என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

கொடூர கொலை
அப்போது சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி உடலை மட்டும் கவரில் போட்டு மூடி வைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தமீம் பானுவிற்கும் சக்கர பாணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தலை துண்டிப்பு
இதனால் பிரச்சினை எழுந்ததால் தமீம் பானு வீட்டை காலி செய்து ராயபுரம் பகுதியில் வந்து குடியேறியதாக கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி அன்று ராயபுரத்தில் உள்ள தமிம் பானுவின் வீட்டிற்கு சக்கரபாணி வந்து இருந்ததாகவும் அப்போது அவரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட தமிம் பானுவின் தம்பி பாஷா அருகிலிருந்த அருவமனையைக் கொண்டு தலையை துண்டாக வெட்டியதும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை
மேலும் வெட்டிய தலையை சாக்குமூட்டையில் வைத்து அடையாறு பகுதியில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிம்பானு மற்றும் அவரது தம்பி வாசிங் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கீழ் வீட்டில் குடியிருக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போன தலையை தேடி வருகின்றனர்.