தங்கம் எனக்கூறி.. பித்தளையை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி.. சென்னை கும்பலுக்கு வலைவீச்சு!
சென்னை: சென்னையில் தங்கம் எனக்கூறி பித்தளையை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்., சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரிதா(35).
கொளத்தூர் ஹரிதாஸ் மெயின் ரோடு பகுதியில் துணி கடை வைத்துள்ளார். இவரது துணிக்கடைக்கு கடந்த 9-ம் தேதி இரண்டு பேர் வந்து துணி எடுத்து உள்ளனர்.
அதன் பிறகு மறுநாள் மீண்டும் துணி எடுக்க வந்த அந்த நபர்கள் தங்களிடம் சில தங்க குண்டுமணிகள் இருப்பதாகவும் அவசரத் தேவைக்காக அதை விற்று தரும்படியும் கூறியுள்ளனர்.

மர்ம நபர்கள்
குறைந்த அளவு பணம் கொடுத்தால் போதும் என்று கூறி தங்க குண்டுமணிகளைக் சரிதாவிடம் அவர்கள் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். சரிதா அதைக் கொண்டு சென்று கடையில் காண்பித்த போது அது ஒரிஜினல் தங்கம் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மீண்டும் சரிதாவை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் ''அவசர தேவைக்காக எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க குண்டுமணிகள் எங்களிடம் உள்ளது. அதை வைத்துக் கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் போதும்'' என்று கூறியுள்ளனர்.

பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே..
அதற்கு சரிதா எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். ''உங்களால் எவ்வளவு பணம் தர முடியுமோ அதைத் தாருங்கள் பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்கிறோம்'' என்று அந்த நபர்கள் தொடர்ந்து கூறியுள்ளனர். இதனை நம்பிய சரிதா தான் வைத்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் ரெடி செய்து அந்த நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். பணத்தை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே கொண்டு வருமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர்.

நகையையும் கொடுத்தார்
சரிதாவும் அந்த பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது சரிதா தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க வளையல்களை கழட்டி அந்த கும்பலிடம் கொடுத்துவிட்டு தான் கொண்டு சென்ற பணத்தையும் கொடுத்துள்ளார். பிறகு அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த தங்க குண்டுமணிகளை சரிதாவிடம் கொடுத்துள்ளனர். சரிதா அதை வீட்டுக்கு எடுத்து வந்து அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்று காண்பித்துள்ளார்.

பித்தளை
அப்போது அவை தங்கம் இல்லை என்பதும் அனைத்தும் பித்தளை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரிதா தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.பிறகு இதே போன்ற சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றதை தொலைக்காட்சி மூலம் அறிந்த சரிதா செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கடைக்கு வந்த நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று தங்க குண்டுமணி கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அயனாவரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சென்னையில் இதுபோல் கும்பல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications