வடிவேலு பட பாணியில் இளநீர் திருடிய நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
சென்னை: இளநீர் திருடி தனியாக இளநீர் கடையை வைத்து நடத்தியவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கே கே நகர் 80 அடி சாலையில் நடைபாதை ஓரமாக பல இளநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு லிங்கம் என்பவர் சொந்தமாக இளநீர் கடை வைத்துள்ளார்.
இவர் சென்னை கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கடந்த 30-ஆம் தேதி லாரி மூலம் கொண்டு வரும் இளநீர் காய்களை வாங்கி வந்து கடையில் சுவற்றின் ஓரமாக தார்ப்பாய் மூலம் மூடி வைத்து வீட்டுக்கு சென்று விட்டேன்.

கடை திறப்பு
அடுத்த நாள் வழக்கம் போல் கடையை திறக்கும் போது இளநீரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து புகாரை பெற்ற போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று சக்கர வண்டியில் வரும் நபர் ஒருவர் இளநீரை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை
ஆனால் யார் திருடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து இளநீர் திருடியதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை பிடித்து கே கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோயம்பேட்டில் கடை
அப்போது இளநீர் குலைகளை திருடி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கடை விரித்து அதிக விலைக்கு விற்று சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இளநீர் திருடிய ரஜினிகாந்த் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயில் காளை
இந்த சம்பவத்தை பார்த்தவுடன் விஜயகாந்த் நடித்த கோயில் காளை படம்தான் நினைவுக்கு வந்தது. அந்த படத்தில் நடிகர் கவுண்டமணி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அப்போது அவரது கடையில் பணியாற்றும் செந்திலும் வடிவேலும் திருடுவர். கவுண்டமணி வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கும் போது செந்தில் இளநீர் குலைகளை கயிறு போட்டு அதில் கட்டிக் கொடுக்க அதை வடிவேல் பத்திரப்படுத்துவார்.

காமெடி
இந்த திருட்டை கவுண்டமணி தெரிந்து கொள்வார். நேராக வடிவேலுவிடம் போய் அந்த கயிற்றை வாங்கிக் கொள்வார். செந்தில் கயிற்றை விடுடா என்பார். ஆனால் கயிறோ வராது. திரும்பி பார்த்தால் கவுண்டமணி. ஷாக்காகும் செந்தில், ஒன்னுல்லண்ண இளநீர் கயிற்றுல கட்டி விளாண்டுகிட்டு இருக்கோம் என்பார். நீங்கள் விளையாடுவதற்கு என் இளநீர் தான் கிடைச்சதா என இருவரையும் கவுண்டமணி அடிப்பார். இப்படி சினிமாவில் பார்த்த காட்சியை போல் நிஜத்திலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications