நள்ளிரவில் திடீரென திரண்ட ஆசிரியர்கள்.. மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது! பரபரப்பு
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நள்ளிரவில் மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சம வேலைக்குச் சம ஊதியம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர். அதில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட போதிலும், போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.
என்ன கோரிக்கை: அதாவது கடந்த 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்படுகிறது. இருப்பினும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒரே வேலை செய்தாலும் ஊதிய முரண் இருக்கிறது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
மீண்டும் போராட்டம்: இதனால் போராட்டத்தைக் கைவிடும்படியும் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பிரச்சினை முடியும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்தனர். இந்தச் சூழலில் தான் நேற்று காலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்த வந்த டிபிஐ வளாகத்தில் இருந்து அவர்களைக் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுதலை செய்தனர். இதற்கிடையே டிபிஐ வளாகத்தில் நேற்றிரவு மீண்டும் போராட்டம் நடத்த முயன்றனர்.
டிபிஐ வளாகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இரவு 10.30 மணியளவில் டிபிஐ வளாகத்திற்கு வந்த அவர்கள், மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டம் நடத்தும் ஆசிரியர்களைப் பேருந்தில் ஏற்றிய போலீசார், பேருந்து நிலையத்தில் விடுவதாகக் கூறியதாகவும் இருப்பினும், பரனூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழிப்பு செய்வதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
நள்ளிரவில் பரபரப்பு: மேலும், சொந்த ஊருக்குச் செல்லச் சொல்லி போலீசார் வலியுறுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இடையூறு இல்லாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், போலீசார் தங்களை மோசமாக நடத்துவதாகவும் அலைக்கழிப்பு செய்வதாகவும் அவர்கள் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். நள்ளிரவில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications