போலீஸ்காரருக்கு எமனாக மாறிய ரேஸ் பைக்.. சென்னையில் காவலர் பலி! விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம்
சென்னை: சென்னை போரூர் அருகே அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த உயர் ரக ரேஸ் பைக் மோதி இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்ற காவலர் உயிரிழந்துள்ளார். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் ரோந்து சென்ற போரூர் காவல் நிலைய காவலர் குமரன் பலியானார்.
சென்னை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் போரூர் காவல் நிலைய காவலர் குமரன் (50) இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த காவஸாகி நிஞ்சா ரேஸ் பைக் ஒன்று வேகமாக காவலர் குமரனின் வண்டி மீது மோதியது.

இதில் காவலர் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். ரேஸ் பைக்கை சாலையில் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரேஸ் பைக் மோதி, பணியில் இருந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஸ் பைக்குகளை பொதுமக்கள் செல்லும் சாலையில் பயணிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய ரேஸ் பைக்கான காவஸாகி நிஞ்சா, சுமார் 10 லட்சம் ரூபாய் விலை கொண்டது. இதுபோன்ற ரேஸ் பைக்குகளில் இளைஞர்கள் பொதுமக்கள் செல்லும் சாலைகளில் சீறிப் பாய்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ரேஸ் இளைஞரின் ஆர்வக்கோளாறுக்கு, போலீஸ்காரர் பலியாகி உள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications