அரசு பேருந்துகள் மீதான அபராதம் "திடீர்" வாபஸ்! முடிந்தது டிரைவர்கள் VS போலீஸ் பனிப்போர்!
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள், காவல் துறையினர் இடையே மோதல் நிகழ்ந்த நிலையில் அரசு பேருந்துகள் மீது விதித்த அபராதங்களை காவல் துறை வாபஸ் பெற்றது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தில் கடந்த 21 ஆம் தேதி காவலர் ஒருவர் ஏறினார். அப்போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட்ட கேட்ட போது எடுக்க முடியாது என்றார். இது தொடர்பான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்கும் டிக்கெட் கிடையாது.

நாங்களும் அரசு பணி செய்பவர்கள்தானே எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதம் செய்தாராம். இதைத் தொடர்ந்து அரசு பேருந்தில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததுடன் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள்.
போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலைதானே பார்க்கிறோம். எங்களையும் இலவசமாக நீங்கள் ஏன் பயணிக்க விடக் கூடாது என கேட்டு வாக்குவாதம் செய்தார். நாங்குநேரியில் நடந்த சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அது போல் நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற 3 அரசு பேருந்துகளில் வள்ளியூர் போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும் தலா ரூ 500 அபராதம் விதித்தனர்.
சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 25 அரசு, ஆம்னி பேருந்துகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள், காவல் துறையிநர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துவரும் சமாதானமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் "நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள். பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள், ஆனால் அது சம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பிரச்சினையாகிவிட்டது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என கண்டக்டர் பேச, நானும் வருத்தம் தெரிவிக்கிறேன்.
இனி மேல் போக்குவரத்து துறையும் காவல் துறையும் நண்பர்களாக செயல்படுவோம் என காவலர் பேசுகிறார். இருவரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு டீ குடித்தனர். இதையடுத்து அரசு பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications