சென்னை பேசின் பிரிட்ஜில் குடிபோதையில் ஸ்கூட்டி ஓட்டிய இளைஞர்.. சொடுக்கு போட்டு போலீசை மிரட்டி உளறல்
சென்னை: எமர்ஜென்சியாக போய் கொண்டிருக்கிறேன்.. இப்படி என்ன நிற்க வைச்சுட்டாங்க.. என் வீடு இங்க பக்கத்தில் தான் இருக்கிறது என்று குடிபோதையில் வந்த இளைஞர் போக்குவரத்து போலீசாரிடம் ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை பேசின் பிரிட்ஜில் குடிபோதையில் ஸ்கூட்டி ஓட்டியதால் தடுத்து நிறுத்திய போலீசாரை, அந்த இளைஞர்கள் போதையில் சொடுக்கு போட்டு மிரட்டியதுடன் ஃபைன் போட விடாமல் உளறிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதுமே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால், வாகனத்தை பறிமுதல் செய்யும் போலீசார், 10 ஆயிரம் அபராதத்தை கட்டிய பிறகு தான் வாகனத்தை விடுவிக்கிறார்கள். இந்த சோதனை சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் தீவிரமாக நடக்கிறது. அதேநேரம் மற்ற ஊர்களை ஒப்பிடும் போது, சென்னை தாம்பரம் பகுதியில் மிகத்தீவிரமாக சோதனை நடைபெறும். மற்ற ஊர்களில் குடித்து வாகனம் ஓட்டினால் சில நேரங்களில் ஈஸியாக தப்பிவிடக்கூட முடியும்.

ஆனால் சென்னையில் அப்படி இல்லை.. ஒவ்வொரு ஏரியாவிற்கும் உள்பட்ட காவல் நிலைய சரகத்தில் கண்டிப்பாக சோதனை நடைபெறும். இரவு நேரங்களில் குடித்தவர்கள் வாகனத்தில் கை வைக்கவே யோசிக்க வேண்டும். ஏனெனில் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி சென்றால் அபராதம் உறுதி தான். குறிப்பாக வார இறுதிகளில், இரவு நேரங்களில் சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கண்டிப்பாக அபராதம் கட்டாமல் வீட்டிற்கு போய்விட முடியாது. ஏனெனில் சோதனை அந்த அளவிற்கு தீவிரமாக நடைபெறுகிறது.
பொதுவாக சென்னை போலீசார் இரவு நேரங்களில் பழைய குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றச்செயல்களை செய்து தப்பி ஓடிவருபவர்களை பிடிக்கவும் சோதனை நடத்துவார்கள். அதேபோல் மது அருந்துவிட்டு வாகனத்தை ஓட்டி விபத்தை தடுக்கவும் சோதனையை தீவிரப்படுத்துவார்கள். 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற விதிமுறையின் படி, மது அருந்துவோரை பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் ஆங்காங்கே ரகசியமாக நிற்கிறார்கள். முன்னால் சோதனையும் நடத்தப்படுகிறது.
பின்னால் தப்பி ஓட முயன்றால், ஏற்கனவே மறைந்து நிற்கும் போலீசார் அவர்களை மடக்கிவிடுகிறார்கள். இதனால் பல மதுப்பிரியர்கள் வசமாக சிக்கி கொள்கிறார்கள். உடனே வாகனத்தை நிறுத்தி மது பரிசோதனைக்காக வைத்திருக்கும் கருவியில் சிறு குழாயை பொருத்தி ஊதச் சொல்கிறார்கள். மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ரூ,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. 10 ஆயிரம் அபராதத்தை கட்டாமல் வண்டியை எடுத்து செல்ல முடியாது என்பதால் வாகன ஓட்டிகள் புலம்பி தவிக்கிறார்கள்.
அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னை பேசின் பிரிட்ஜில் நடந்துள்ளது. சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் குடிபோதையில் ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் வாகன சோதனையில் சிக்கினார். அவருக்கு போலீசார் அபராதம் விதிக்க முயன்ற போது, அந்த இளைஞர் போலீசாரை சொடுக்கு போட்டு மிரட்டியதுடன், அபராதம் விதிக்கவிடாமல் தொடர்ந்து உளறிய படி இருந்தார்.
இதனால் போலீசார் அவரிடம் யார் என்ற விவரங்களை விசாரித்தார். அந்த இளைஞர் பெயர் சுரேஷ் என்பதுடன், அவர் பேஷன் டிசைனர் என்பதும் தெரியவந்தது. அந்த இளைஞர் போலீசாரிடம் கூறும் போதும், எமர்ஜென்சியாக போய் கொண்டிருக்கிறேன்.. இப்படி என்ன நிற்க வைச்சுட்டாங்க.. என் வீடு இங்கே பக்கத்தில் தான் இருக்கிறது. அபராதம் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு சொல்கிறீர்கள்? அதுவரை என் மனைவிக்கு ஏதாவது ஆகிவிட்டால் யார் பொறுப்பு என்று அந்த இளைஞர் கேட்டார்.
அதற்கு போலீசார், குடித்துவிட்டு ஏன் வாகனம் ஓட்ட வேண்டும் என்று கேட்டனர், அதற்கு அந்த இளைஞர் நான் குடித்துவிட்டேன்.. ஆனால் திடீரென எமர்ஜென்சி என்று கூறினார்கள். அதனால் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.. இதுபோன்ற சூழலை ஹெல்மெட் போட்டு கொண்டா போக முடியும். ஏற்கனவே குடித்துவிட்டேன்.. இப்படியான சூழலில் என்ன செய்வது.. எமர்ஜென்சியாக போக வேண்டும் என்று கூறினார். மேலும் சொடுக்கு போட்டு போலீசிடம் மிரட்டிய இளைஞர், ஃபைன் போட விடாமல் உளறிய வீடியோ வெளியாகி உள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications