தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை ‘டியர்’ என்றே அழைத்த டிஐஜி விஜயகுமார்.. இன்ஸ்பெக்டர் உருக்கம்!
சென்னை: டிஐஜி விஜயகுமார் தற்கொலை போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஜயகுமார் அன்பானவர் என்றும், தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளை சில சமயங்களில் திட்டிவிட்டால் கூட அவர்களை அழைத்து அன்பாகப் பேசுவார் என்றும், அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிஜிபி சங்கர் ஜிவால் விரைகிறார். கூடுதல் டிஜிபி அருண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் அம்பேத்கார், டிஐஜி விஜயகுமார் பற்றிய தனது நினைவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அம்பேத்கார் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகாலை அதிர்ச்சியுடன் விடிந்தது. விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்களின் மறைவு. சிறந்த ஆன்மீக வாதி. அன்பானவர், இரக்க குணம் கொண்டவர். சில நேரங்களில் தன் கீழ் பணிபுரிபவர்களை திட்டிவிட்டாலும் அடுத்த நொடியே மறந்து பாசத்தை காண்பிப்பார். கடலூர் எஸ்.பியாக 2015ல் இருந்த போது அவரின் கீழ் பணிபுரிந்தேன். அதன்பிறகு 2017ல் க்யூ பிரிவில் மாறுதலாகி இருந்தேன். எனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாத போது என்னை அழைத்து பேசினார். அதே மாதிரியான உடல் நிலை சரியில்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இருப்பதாக கூறினார்.
2016-17 காலகட்டத்தில் மனதளவில் தளர்வாகவே இருந்தார். க்யூபிரிவில் இருந்த என்னை மாறுதல் பெற்று வரும்படி கூறினார். அவரது உதவியால் சிதம்பரம் காவல் நிலையத்தில் சேர்ந்தேன். சில பல காரணங்களால் ஒரு சில மாதங்களில் அங்கிருந்தும் மாற்றப்பட்ட போதும் அழைத்து அன்புடன் பேசினார். முன்பைக் காட்டிலும் என்னிடம் ஒரு சகோதரரைப்போல் பாவித்து பேச ஆரம்பித்தார்.
இறுதியாக திருவாரூரில் சந்தித்தேன் மதிய உணவு வேளையின் போது சென்று சேர தாமதமாகியும் காத்திருந்து பார்த்தார்கள்.
அன்பானவர், டியர் என்கின்ற வார்த்தையையே என்னிடம் பேசும் போதும் சாட் பண்ணும் போதும் பயன்படுத்தினார். இளகிய மனம் படைத்தவர்.

காக்கிச் சீருடையை மிகவும் நேசித்தவர். இவ்வளவு விரைவாக இயற்கையில் கரைவார் என எதிர்பார்க்கவில்லை. மிஸ் யூ சார்! கம்பீரமாக இருப்பவர்கள் எல்லாம் எதையும் தாங்குபவர்கள் அல்ல, அவர்களுக்கும் மன நிம்மதி கெடும்.
அந்த நிம்மதியை கெடுப்பது,
1)மீடியாக்களின் அளவுக்கு மீறிய தாக்குதல்,
2)அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் அதிகார அணுகுமுறைகள்,
3)அதிகாரிகளின் அதிகார அணுகுமுறைகள்,
4)நீதிமன்ற வழக்குகள்,
5)குடும்பத்தில் பிரச்சனைகள், மருத்துவ பிரச்சனைகள்
இதனை ஒவ்வொரு அதிகாரிகளும் காவல்துறையில் பல காலகட்டத்தில் கடந்துவந்துள்ளார்கள். இனியும் வருவார்கள். இந்த மரணத்தை முன்னுதாரணமாக எவரும் எடுத்துக்கொள்ளவேண்டாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications