2 சின்ன பொண்ணுங்க.. கொடுமை.. மும்தாஜ் வீட்டிலிருந்து வந்த அவசர கால்.. போலீஸ் விசாரணையில் பரபரப்பு
சென்னை: இரண்டு சிறுமிகளை வீட்டில் வைத்து துன்புறுத்தியதாக நடிகை மும்தாஜ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தைகள் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தரப்பு தகவல் தெரிவித்துள்ளன.
நடிகை மும்தாஸ் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை. மோனிஷா என் மோனலிஸா படத்தில் அறிமுகம் ஆனவர் மும்தாஜ்.
அதன்பின் பல்வேறு டி ராஜேந்தர் படங்களிலும், இன்னும் சில படங்களிலும் மும்தாஜ் நடித்தார். அதன்பின் பீல்ட் அவுட் ஆன மும்தாஜ் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

மும்தாஜ் வீட்டிலிருந்து போன்
சென்னை அண்ணா நகரில் இருக்கும் எச் பிளாக் குடியிருப்பு ஒன்றில் மும்தாஜ் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்தான் மும்தாஜ் வீட்டில் வேலை பார்ப்பதாக கூறி, இளம் பெண் ஒருவர் போலீசாருக்கு கால் செய்துள்ளார். நம்பர் 100க்கு கால் செய்த அந்த பெண், மும்தாஜ் தன்னை மிரட்டுவதாகவும், கொடுமை படுத்துவதாகவும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு விரைந்தனர்.

போலீஸ் விசாரணை
போலீசார் இதையடுத்து மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மும்தாஜ் வீட்டில் தானும், தனது 17 வயது தங்கையும் தங்கி வேலை பார்த்து வருவதாகவும். மும்தாஜ் தங்களை மிரட்டி, கொடுமை படுத்துவதாகவும் அந்த வேலைக்கார பெண் புகார் அளித்தார். அதோடு பக்கத்து வீடு ஒன்றில் வேலைக்கு சேர முயன்ற போது, எங்களை தேடி வந்து மும்தாஜ் ஆட்கள் மிரட்டினார்கள். எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று அந்த வேலைக்கார பெண் புகார் அளித்தார்.

என்ன நடந்தது?
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்களின் தாயாரிடம் போலீசார் போன் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மும்தாஜ் வீட்டில் 6 வருடமாக வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது சமீப காலமாக மும்தாஜ் தங்களை கொடுமைப்படுத்துவதாக இரண்டு பேரும் தனது தாயாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் அந்த பெண்களின் தாயாரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.

காப்பகத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து இரண்டு பெண்களையும் மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். இதில் இரண்டு பெண்களையும் 6 வருடமாக மும்தாஜ் வேலைக்கு வைத்து இருக்கிறார். அப்படி என்றால் இரண்டு பேரும் மைனர்களாக இருக்கும் போதே அவர்களை மும்தாஜ் வேலைக்கு வைத்து உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மைனர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவர் மீது குழந்தைகள் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தரப்பு தகவல் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications