Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவை விஞ்சிய யுவன் சங்கர் ராஜா.. வாடகையே கொடுக்கலையாம்! விசாரணையில் அம்பலம்.. அடுத்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை பணம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயன்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் யுவன் வீட்டு வாடகை தரவில்லை என்ற புகார் உண்மை தான் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் இசைஞானி எனப் போற்றப்படும் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவும் தற்போதைக்கு முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருகிறார். அரவிந்தன் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இப்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

Yuvan Shankar Raja Police Ilayaraja

யுவன் சங்கர் ராஜா- நா.முத்துக்குமார்- செல்வராகவன் கூட்டணி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசை கூட்டணியாக இருக்கிறது. இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் யுவன் சங்கர் ராஜா இருக்கிறார்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா தற்போது தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார். புதிய கீதை படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்களும் ட்ரெய்லர்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த யுவன் சங்கர் ராஜா அதனை ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்தார். அந்த வீடு அம்ஜத் பேகம் என்பவருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் துபாயில் இருக்கும் நிலையில் அவரது சகோதரர் முஹம்மது ஜாவித் யுவன் சங்கர் ராஜா மீது திருநெல்வேலி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவன் சங்கர் ராஜா தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் நிலையில் இதுவரை 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார்.

தொடர்ந்து வாடகை கேட்க போன் செய்த போதும் அவர் செல்போன் எடுக்கவில்லை. மேலும் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டை காலி செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் யுவன் சங்கர் ராஜாவை விசாரித்து வாடகை பாக்கி மற்றும் இழப்பீடை பெற்று தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தன் மீதான புகாரை மறுத்துள்ளதோடு தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஐந்து கோடி ரூபாய் கேட்டு வீட்டின் உரிமையாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில்,"பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் தன்னை பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், யூட்யூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்துள்ள நிலையில் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு 5 கோடி இழப்பீடு வேண்டும்" என கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் யுவன் சங்கர் ராஜா வாடகை பாக்கி வைத்திருப்பது அம்பலமாகி இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா வீட்டு உரிமையாளர் இடையே வாடகை ஒப்பந்தம் இருக்கும் நிலையில்.. ஆனால் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என கூறப்படும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இடப் பிரச்சனையில் யுவன் சங்கர் ராஜா மட்டுமல்ல அவரது தந்தை இளையராஜா சிக்கி சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் தான் தனது ஸ்டூடியோவை வைத்திருந்தார் இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைக்கப்பட்டது அந்த இசைக் கூடத்தில் தான்.

பல ஆண்டுகள் அங்கே இளையராஜா இருந்த நிலையில், வாடகை உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாத நிலையே தான் இருந்தது. இருதரப்பு சுமூக உறவை வைத்திருந்த நிலையில் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்றுவது உபகரணங்களை மாற்றுவது என தன் சொந்த இடத்தைப் போல இளையராஜா நடந்து கொள்வதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் கருதியது. இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பனிப்போர் மூண்டது. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் கூற இளையராஜா தரப்பு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது. அதற்குப் பிறகு இந்த விவகாரம் ஓய்ந்தது. இந்த நிலையில் தான் வாடகை பிரச்சனை தொடர்பாக யுவன் சங்கர் ராஜா சிக்கி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+