8k கேமராவில் பதிவான காட்சியை.. கேட்கும் போலீஸ்.. மாட்டிகிட்டீங்க விஜய் ப்ரோ.. அடித்து சொன்ன சாட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் தரம் வாய்ந்த 8k திறன் கொண்ட கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வந்தால் கரூரில் நடந்த உண்மைகள் மொத்தமாக வெளியே வரும் என்று நாம் தமிழர் கட்சியினர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு கரூர் போலீசார் வருகை தந்துள்ளனர். போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த கரூர் போலீசார், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு கடிதம் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

TVK Vijay

அதாவது கரூர் பரப்புரை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொடுக்குமாறு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீஸ் வந்தது தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போக தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் தவெக பிரச்சார பேருந்தில் இருக்கக் கூடிய கேமராவில் பதிவான வீடியோக்களை அளிக்க சொல்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

அட்டாக் மோடில் நாம் தமிழர்

இதன் மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் தவெக (அமரர் ஊர்தி )பிரச்சார பேருந்தில் இருக்கக் கூடிய கேமராவில் பதிவான காணொளிகளை ஒப்படைக்கச் சொல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது !

மிகவும் தரம் வாய்ந்த 8k திறன் கொண்ட அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வந்தால் கரூரில் நடந்த உண்மைகள் மொத்தமாக வெளியே வரும் ! தவெக தரப்பு நிச்சயம் இதை பாதுகாப்பு காரணம் கருதி தர முடியாது எனச்சொல்லலாம் ! வசமா சிக்கிட்டீங்க ப்ரோ , என்று விஜய்யை விமர்சனம் செய்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விளக்கம்

கரூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசு சார்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

கரூரில் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள் என்ற கேள்விக்கு வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ள தமிழக அரசு, காவல்துறையினருக்கு விஜய் நன்றி தெரிவிப்பதையும் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு காவல்துறையினர் முதலுதவி செய்வதையும் அவர்களை மீட்பதையும் சுட்டிகாட்டி விளக்கம் அளித்துள்ளனர்

சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான
பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது; 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

TVK Vijay

தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்"

அமுதா ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால்தான் அவர் காவல்துறைக்கு நன்றி சொன்னார். காவல்துறை இல்லையென்றால் இங்கே வந்திருக்க முடியாது என்று விஜய் கூறி இருந்தது இதற்கு உதாரணம். போலீசார் தடியடி நடத்தவில்லை.

வாகனம் செல்ல , ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாத போது, கூட்டத்தை நகர்த்தி, போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். தடியடி எல்லாம் நடத்தவில்லை. ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு வந்தது. அதற்கான ஆதாரங்கள் இதோ (ஆம்புலன்ஸ் கால் ரெக்கார்டிங் ஆதாரங்களை காட்டுகிறார்). விஜய் வரும் போதே அவரை பின்தொடர்ந்து பெரிய கூட்டமும் வந்தது.

அங்கே வந்த ஆம்புலன்சுகள்., அதாவது 7 ஆம்புலன்சுகள் அவர்களின் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருந்த ஆம்புலன்சுகள். அவர்களின் கட்சியின் வந்த ஆம்புலன்ஸ்கள் போதவில்லை என்ற பின்புதான் 108 ஆம்புலன்சுகள் வந்தன. கரூரில் விஜய் பேசும் போது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் இந்த வீடியோவில் உள்ளன. அவர் பேசும் போது முழுமையாக மின்சாரம் இருந்தது. போலீஸார் தொண்டர்களை விலக்கிவிட்டனர்; தடியடி நடக்கவில்லை, என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+