கரூர் பேரழிவு.. சென்னைக்கு ஓடிய விஜய்.. நேரடியாகவே விசாரிக்க போலீஸ் முடிவு! வெளியான தகவல்
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்குத் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35+க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சமீப காலங்களில் பிரச்சார நிகழ்வில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவமாக இது இருக்கிறது. இதற்கிடையே இந்தத் துயரம் தொடர்பாக விஜய்யிடம் நேரடியாகவே போலீசார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். விஜய்யை பார்க்கக் கூட்டம் அதிகமாகவே வருகிறது. இதனால் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்து வருகிறார்கள். அதன்படி இன்று கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவரை பார்க்க மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

இதுவரை விஜய் பிரச்சாரத்தில் எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், இன்று கரூரில் நிலைமை வேறு மாதிரி போய்விட்டது. விஜய் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டு இருந்தபோதே அங்குத் தள்ளுமுள்ளு ஏற்படத் தொடங்கியது. வரிசையாகப் பலரும் மயங்கி விழுந்தனர். ஆனால், இது தெரியாமல் விஜய் பேசிக் கொண்டு இருந்தார். ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்த நிலையில், அசம்பாவிதம் நடந்துள்ளது.
இதுவரை 35+க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் பலரும் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர்.
மற்றொருபுறம் விஜய் கரூரில் இருந்து கிளம்பிவிட்டார். கரூரில் இருந்து திருச்சி வந்த அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிவிட்டார். திருச்சி விமான நிலையத்திலேயே செய்தியாளர்கள் விஜய்யிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்குப் பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார். சென்னையிலும் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
இதற்கிடையே விஜய்யிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை வந்தடைந்துள்ள விஜய்யின் வீட்டிற்கே செல்லத் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அசம்பாவிதம் தொடர்பாகவும் இதற்குக் காரணம் தொடர்பாகவும் விஜய் விசாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அவரும் கரூருக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications