Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சேரி” சர்ச்சை.. சாரி சொல்லாத குஷ்பு! வீட்டுக்கு சென்ற 7 போலீஸ் - போராட்ட அறிவிப்பால் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேரி மொழி என்று பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இதனை தொடர்ந்து நேற்று மன்சூர் அலிகான் நேற்று மன்னிப்பு கேட்டார். இதனை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார் திரிஷா. முன்னதாக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவரும் பாஜகவை சேர்ந்த நடிகையுமான குஷ்பு தெரிவித்து இருந்தார்.

Police protection for BJP actress Khushbu, who spoke insultingly about the slum language

இதனை விமர்சித்து எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, 'திமுகவினர் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்து உள்ளார் என்று பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பட்டியலின பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில், "குஷ்புவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதுதான் குஷ்புவின் நோக்கம். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும்போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும்கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதைத்தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாகத் திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பு கபட நாடகமாடுகிறார்? இப்போதுகூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. சேரி மொழி என்று சொல்லி, பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்புவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?

குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்." என்று எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று குஷ்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீஸ் உதவி ஆய்வாளர் தலையில் 7 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+