தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை.. புதுச்சேரி காவல்துறை சொன்ன காரணம்!
புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பியிடம் த.வெ.கவினர் மனு அளித்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார்.

இதனிடையே, கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை தவெக உருவாக்கி உள்ளது. இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் அண்மையில் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் QR கோடு உடன் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் உள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்தார்.
புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, அம்மாநில தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் தவெகவினர் புதுச்சேரி டிஜிபியிடம் அண்மையில் மனு அளித்தனர். அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி எல்லையான காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வரை சாலை மார்க்கமாக வந்து மக்களை சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே ஒலிபெருக்கி மூலமாக மக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார். எனவே, தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என குறிப்பிடபட்டிருந்தது. புதுச்சேரியில் 25 கி.மீ தூரம் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவித்து, புதுச்சேரி தலைமை செயலகத்திலும் தவெகவினர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மனு கொடுத்தனர்.
விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிஜிபிக்கு மனு அளித்தனர். கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் இறந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மீறி அனுமதி தந்தால் போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications