தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே ஷாக்.. சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!
சென்னை: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் இன்று அமலுக்கு வரும் நிலையில், முதல் நாளான இன்றே சென்னையில் கோடிக் கணக்கில் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது.

வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே பரபர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. சென்னையில் சுமார் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
அதாவது சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரியளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் ரூ. 1.42 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். அங்கே இருந்த 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை வைத்திருந்ததற்காக அந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணத்தை வைத்திருந்த யாசர் அரபாத் என்பதும் மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கே இருந்த மற்றொரு நபரையும் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
முதலில் ஹவாலா பரிமாற்றம் குறித்த தகவல் கிடைத்த உடன் போலீசார் அங்கே சென்றுள்ளனர். அங்கே சென்ற போலீசார் அங்கே இருந்த 3 பேரிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதையடுத்து அந்த ரூமை போலீசார் சோதனை செய்தனர். அப்போது தான் அங்கே கட்டுக்கட்டாக பணம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் தெரிய வந்து இருக்கிறது. அதாவது அந்த இடத்தின் உரிமையாளர் ராமா புரத்தைச் சேர்ந்த நபராம். மேலும், அந்த உரிமையாளர் தரும் தகவலின் அடிப்படையில் அங்கே வரும் நபருக்குப் பணத்தைக் கொடுப்பதே யாசர் வேலை என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட முதல் நாளே இப்படி கோடிக் கணக்கில் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications