அப்பவே சொன்னாங்களே.. பாருங்க.. தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. ரேஷன் கடைகளுக்கு பறந்த அடடே "ஆர்டர்"
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இருந்து அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக சமீபத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவிற்கு இடையே தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.07.2023 முதல் 31.07.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று பதினாறு மட்டும்) மதிப்புள்ள 3610 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட 619 190 வாகனங்களும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்கீழ் 1 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என்று கூறப்பட்டு உள்ளது.
உத்தரவு: மேலே குறிப்பிடப்பட்ட உத்தரவிற்கு இடையே தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி கம்பம் அருகே புதுப்பட்டியில் அருகே ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுமார் ரேஷன் அரிசி ஒரு டன்னை விருமாண்டி 40, பிரபு 27 என்று இரண்டு பேர் கடத்த முயன்ற நிலையில் உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் இவர்களை கைது செய்தனர். இவர்கள் கேரளாவிற்கு உணவு கடத்த முயன்றதாக தகவல் ஒன்று வெளியான விலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications